மத்திய இடைக்கால பட்ஜெட் தாக்கலில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது உரையில் குறிப்பிட்ட ’லக்பதி தீதி’ குறித்து அதிகமானோர் இணையத்தில் தேடியதில், இன்றைய அதிகம் தேடப்பட்டவற்றின் ப்ட்டியலில் அது இடம் பிடித்தது.
மத்திய இடைக்கால பட்ஜெட் 2024 தாக்கலை முன்னிட்டு தனது உரையில் ’லக்பதி தீதிஸ்’ என்போர் குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பெருமையுடன் குறிப்பிட்டார். அதனையடுத்து யாரந்த லக்பதி தீதிஸ் என்று பலரும் கூகுளில் தேட ஆரம்பித்தார்கள். அந்த வகையில் ஆச்சரியமான தகவல்களையும் அவர்கள் கண்டடைந்தனர்.
'லக்பதி திதிஸ்' அதாவது லட்சாதிபதி சகோதரிகள் என்பது ஆண்டுக்கு லட்சங்களில் வருமானம் பார்க்கும் எளிய கிராமப்புற மகளிர் சுய உதவிக் குழுவினரை குறிக்கிறது. கடந்த ஆண்டு சுதந்திர தின உரையின் போது பிரதமர் மோடியால் 'லக்பதி தீதி'கள் உருவாக்கத்தை இலக்காகக் கொண்ட திட்டம் அறிவிக்கப்பட்டது. சுயஉதவி குழுக்களில் பெண்களுக்கு பல தொழில்துறைகளில் பயிற்சி அளிப்பதை நோக்கமாகக் கொண்ட திட்டங்கள் மூலம் அவர்களின் ஆண்டு வருமானத்தை லட்சங்களில் உயர்த்த முடிவு எட்டப்பட்டது.
மோடி அரசின் மகளிர் சக்தி திட்டங்களுக்கு உந்துதலாக இருக்கும் வகையில் மூன்று கோடி 'லக்பதி தீதி'களை உருவாக்கும் இலக்கை நோக்கிய மத்திய அரசின் முடிவை நிதியமைச்சர் தனது உரையில் அறிவித்தார். முன்னதாக இரண்டு கோடியாக அறிவிப்பான இலக்கு தற்போது, 3 கோடி இலக்குக்கு உயர்வு கண்டுள்ளது. 9 கோடி பெண்களைக் கொண்ட 83 லட்சம் சுய உதவிக்குழுக்கள், கிராமப்புறங்களின் சமூக மற்றும் பொருளாதார அதிகாரமளித்தலுக்கு தன்னம்பிக்கையுடன் மாற்றம் தந்திருக்கிறார்கள்.
இத்திட்டத்தின் கீழ், பெண்களுக்கு வழக்கத்துக்கு மாறான நுட்பங்களில் தொழிற்பயிற்சி அளிக்கப்பட்டது. பிளம்பிங், எல்இடி பல்ப் தயாரித்தல், ஆளில்லா விமானங்களை இயக்குதல் மற்றும் பழுது பார்த்தல் போன்ற திறன் மேம்பாட்டு பயிற்சிகள் அவற்றுக்கான உதாரணமாகும். இந்த சுய உதவிக் குழு பெண்களின் முன்னேற்றம் அவர்களின் வருமானத்துக்கான வழிகள், தொழிற் பயிற்சிகள், ஒட்டுமொத்தமாக சுய உதவிக் குழுப்பெண்கள் வாயிலாக கிராமப்புற பொருளாதார மேம்பாடு ஆகியவற்றை இலக்காகக் கொண்டு லட்சாதிபதி சகோதரிகளுக்கான இலக்குகள் தற்போது உயர்த்தப்பட்டுள்ளன.
இதையும் வாசிக்கலாமே...
40,000 ரயில் பெட்டிகள் வந்தே பாரத் தரத்துக்கு உயர்த்தப்படும்: பட்ஜெட்டில் நிதி அமைச்சர் அறிவிப்பு!
வாரத்தில் 4 நாட்கள்தான் வேலை; 3 நாட்கள் விடுமுறை... ஜெர்மனியில் இன்று முதல் புதிய திட்டம்!
ஜனாதிபதி உரை பொய்கள் நிறைந்த பாஜகவின் தேர்தல் பரப்புரை: திருமாவளவன் கண்டனம்!
அதிமுக ஆட்சியில் ரூ.50 கோடி லஞ்சம் கொடுத்த விவகாரம்: 3 கட்டுமான நிறுவனங்களில் அதிரடி ரெய்டு!