இன்று முதல் சலுகைக் கட்டணத்தில் பயணம்...புதிய வசதியுடன் கிளாம்பாக்கம் பேருந்து முனையம்!


கிளாம்பாக்கம் பேருந்து முனையம்

கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இன்று முதல் மாதாந்திர சலுகை பயணச்சீட்டு விற்பனை மையம் (MST Counter) தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சலுகைக் கட்டணத்தில் பயணம் செய்யும் வசதி செய்யப்பட்டுள்ளது.

கிளாம்பாக்கம் பேருந்து முனையம்

சென்னை வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் ரூ.400 கோடியில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு டிசம்பர் 30-ம் தேதி திறந்து வைத்தார்.

சென்னை மாநகருக்குள் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நிலவிவரும் நெருக்கடியைத் தவிர்க்கும் நோக்கிலும், வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் 86 ஏக்கர் பரப்பில் சென்னை பெருநகர வளர்ச்சிகுழுமம் (சிஎம்டிஏ) சார்பில் இந்த பேருந்து முனையம் அமைக்கப்பட்டுள்ளது.

கிளாம்பாக்கம் பேருந்து முனையம்

இந்த நிலையில், கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் இன்று முதல் முதல் மாதாந்திர சலுகை பயணச்சீட்டு விற்பனை மையம் (MST Counter) தொடங்கப்பட்டுள்ளது.

இப்பயணச்சீட்டு விற்பனை மையத்தில், விருப்பம்போல் பயணம் செய்யக்கூடிய ரூ.1000 மதிப்பிலான பயண அட்டை TAYPT (ஒவ்வொரு மாதமும் 16-ம் தேதி முதல் அடுத்த மாதம் 15-ம் தேதி வரை), மாதாந்திர சலுகை பயண அட்டை MST (மாதந்தோறும் 1-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை) மற்றும் 50 சதவீத மாணவர் சலுகை பயண அட்டை SCT(ஒவ்வொரு மாதமும் 11-ம் தேதி முதல் அடுத்த மாதம் 10-ம் தேதி வரை) பயணம் செய்யக்கூடிய பயணச்சீட்டுகள் மாதந்தோறும் 1-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை வழங்கப்படும்.

மேலும், 60 வயது பூர்த்தியடைந்த மூத்தக் குடிமக்களுக்கான கட்டணமில்லா பயண அட்டையுடன் 10 எண்ணிக்கை கொண்ட டோக்கன்கள் மாநகர போக்குவரத்து கழக கிளாம்பாக்கம் பணிமனையிலும் வழங்கப்படும். எனவே, பயணிகள் இதனை பயன்படுத்தி, கிளாம்பாக்கம் மாநகர் போக்குவரத்துக் கழக மாதாந்திர பயணச்சீட்டு விற்பனை மையத்தில் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

x