கடந்த இரண்டு நாட்களாக எந்தவிதமான விலை மாற்றமும் இன்றி விற்பனையான தங்கம் இன்று சவரனுக்கு ரூ.160 குறைந்து விற்பனையாவது நகைப்பிரியர்கள் மற்றும் இல்லத்தரசிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தங்கம் நேற்று ஒரு கிராம் 5,850 ரூபாய்க்கும், ஒரு சவரன் 46,800 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று தங்கத்தின் விலை மேலும் குறைந்துள்ளது.
22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 5,830 ரூபாயாகவும், சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 46,640 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அதே சமயம் 24 கேரட் சுத்த தங்கம், கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து, 6,300 ரூபாய்க்கும், சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து, 50,400 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
தங்கத்தை போலவே வெள்ளியின் விலை இன்று கிராமுக்கு 20 காசுகள் குறைந்து ரூ.77.80 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி 77,800 ரூபாய் ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் வாசிக்கலாமே...
கனமழை எதிரொலி... அண்ணாமலை பல்கலைக்கழகத் தேர்வுகள் ஒத்திவைப்பு!
பத்திரம் மக்களே... இன்று 29 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
மழையால் பாதிப்பு... சென்னை புத்தகக்காட்சிக்கு இன்று விடுமுறை!
தமிழகத்தில் ஜன.12ம் தேதி பலூன் திருவிழா!
நாளை முதல் வேலைநிறுத்த போராட்டம்... இன்று தொழிலாளர்களுடன் முத்தரப்பு பேச்சுவார்த்தை!