கோவை: கனமழை காரணமாக கோவை குற்றாலம், ஆழியார் கவியருவி உள்ளிட்ட பகுதிகளுக்கு மக்கள் செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.
கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் கோவை குற்றாலம், பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் கவியருவி ஆகியவற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
எனவே, பாதுகாப்பு கருதி பொதுமக்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். நீர்வரத்து குறைந்து தடுப்பு வேலிகள் சீரமைக்கப்பட்ட பின் மீண்டும் அனுமதி அளிக்கப்படும் என வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.