எஸ்.எஸ்.கோட்டை மஞ்சுவிரட்டில் மாடுகள் முட்டி இருவர் உயிரிழப்பு @ சிவகங்கை


பிரதிநிதித்துவப் படம்

திருப்பத்தூர்: சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டியில் மாடுகள் முட்டியதில் இருவர் உயிரிழந்தனர்.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே எஸ்.எஸ்.கோட்டையில் கோயில் திருவிழாவையொட்டி இன்று (ஞாயிற்றுக்கிழமை) மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இந்த விளையாட்டில் சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.

இதில் மாடுகள் முட்டியதில் மதுரை மாவட்டம் மேலூர் சேக்கிபட்டியைச் சேர்ந்த சரண் ( 24 ), சிங்கம்புணரி அருகே தேத்திபட்டியை சேர்ந்த 60 வயது மதிக்கத்தக்க நபர் ஆகிய இருவர் சம்பவம் இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து எஸ்.எஸ்.கோட்டை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.