கிண்டலில் வெளிப்பட்ட வேதனை
கடந்த மாதம் இங்கிலாந்தில் ஒரு மொட்டைக் கடிதம் பரவியது. ஏப்ரல் 3-ம் தேதியை ‘இஸ்லாமியர்களை தண்டிப்பதற்கான நாள்’ என்று அறிவிக்கக் கோரியது அக்கடிதம். இது இஸ்லாமியர்களை அச்சுறுத்தினாலும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க நகைச்சுவைப் பேச்சாளர், நடிகர் ஹஸன் மின்ஹஜ் இதை வரவேற்றுள்ளார்.
லண்டனில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இது பற்றிப் பேசும்போது, “இஸ்லாமியர்களை தண்டிக்க ஒரு நாளைத் தேர்ந்தெடுப்பது நல்லதுதான். இதன் மூலமாவது, 364 நாட்களை அவர்கள் விட்டுவைப்பார்கள் அல்லவா?” என்றார். உலகெங்கும் இஸ்லாமியர்கள், தினம் தினம் வன்முறைக்குள்ளாகும் வேதனையை நாசூக்காக வெளிப்படுத்தியது ஹசனின் கிண்டல்.
யக் ஷி’யின் 50 ஆண்டுகள்