கத்தோலிக்க கிறிஸ்தவ மத தலைவரான போப் பிரான்சிஸ் காலமானார்: உலகம் முழுக்க அதிர்ச்சி


சென்னை: கத்தோலிக்க கிறிஸ்தவ மத தலைவரான போப் பிரான்சிஸ் (88) உடல்நலக்குறைவால் காலமானார்

கத்தோலிக்க கிறிஸ்தவ மத தலைவரான போப் பிரான்சிஸ் (88) சுவாசப் பிரச்சினை காரணமாக கடந்த பிப்ரவரி மாதம் ரோம் நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சுவாச பாதையில் தொற்று ஏற்பட்டு நிமோனியா பாதிப்பு ஏற்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து அவர் தொடர் சிகிச்சையில் இருந்து வந்தார். இடையில் அவரது உடல்நிலையில் சற்றே முன்னேற்றம் ஏற்பட்ட நிலையில் மீண்டும் அவரது உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதால் அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கும் இயந்திரம் பொருத்தப்பட்டது. இந்த நிலையில் இன்று காலையில் போப் பிரான்சிஸ் காலமானார்

x