புதுடெல்லி: வங்கிகளின் குறுகியகால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதம் 6.25 சதவீதத்தில் இருந்து 0.25 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது என ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா அறிவித்துள்ளார்.
குறுகியகால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதம் 0.25% குறைக்கப்பட்டதை அடுத்து ரெப்போ வட்டி விகிதம் 6.25%ல் இருந்து 6%-ஆக குறைந்துள்ளது. ரெப்போ வட்டி விகிதம் குறைப்பால் வீடு, வாகனம், தனி நபர் கடன் வட்டி விகிதம் ஆகியவை குறைய வாய்ப்புள்ளது.
கடந்த 5 ஆண்டுகளாக ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்படாமல் 6.5% என்ற அளவில் இருந்து வந்த நிலையில், கடந்த பிப்ரவரியில் 0.25% குறைந்தது. தற்போது 0.25% குறைந்துள்ளது. இதன் மூலம் கடந்த 2 மாதத்தில் ரெப்போ வட்டி விகிதத்தை அரை சதவீதம் குறைத்துள்ளது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
பணவீக்கம் கட்டுக்குள் வரும் என்ற எதிர்பார்ப்பில் வட்டி விகிதத்தை குறைக்கப்பட்டுள்ளது என்றும், இதன் மூலம் இந்திய பொருளாதாரம் ஊக்குவிக்கப்படும் என்றும் ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார்.