சிங்கப்பூர் பள்ளியில் தீ விபத்து: பவன் கல்யாண் மகன் காயம்


அமராவதி: ஆந்​திர துணை முதல்​வர் பவன் கல்​யாணின் இளைய மகன் மார்க் சங்​கர். இவர் சிங்​கப்​பூரில் ரிவர் வேலி ஷாப் ஹவுஸ் பகு​தி​யில் உள்ள பள்​ளி​யில் படித்து வரு​கிறார். இந்​நிலை​யில், நேற்று காலை 9.45 மணி​யள​வில் இப்​பள்ளி இயங்​கும் 2-வது மற்​றும் 3-வது மாடி​யில் திடீரென தீ விபத்து ஏற்​பட்​டுள்​ளது.

தகவல் அறிந்த சிவில் டிபென்ஸ் படை​யினர் சம்பவ இடத்​துக்கு விரைந்து சென்று பள்ளி மாணவர்​கள் மற்​றும் ஆசிரியர்​களை காப்​பாற்​றும் பணி​யில் ஈடு​பட்​டனர். எனினும் 15 மாணவர்​கள் உள்​ளிட்ட 19 பேர் மூச்​சுத் திணறல் ஏற்​பட்டு மயங்கி விழுந்​தனர். இவர்​கள் அனை​வரும் மீட்​கப்​பட்டு அரு​கில் உள்ள மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி ஒரு மாணவர் உயி​ரிழந்​ததாக தெரிய​வந்​துள்​ளது. இந்த தீ விபத்​தில், ஆந்​திர துணை முதல்​வர் பவன் கல்​யாணின் இளைய மகன் மார்க் சங்​கருக்கு கைகள் மற்​றும் கால்​களில் பலத்த தீக்​கா​யம் ஏற்​பட்​டுள்​ளது. இதனை அறிந்த பவன் கல்​யாண், நேற்று மாலை விசாகப்​பட்​டினம் சுற்​றுப்​பயணத்​தில் இருந்து சிங்​கப்​பூருக்கு புறப்​பட்​டுச் சென்​றார். பிரதமர் மோடி, முதல்​வர் சந்​திர​பாபு ஆகியோர் பவன் கல்​யாணை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு அவரது மகனின் உடல் நலம் குறித்​து வி​சா​ரித்​தனர்​.

x