[X] Close

ஃபேஸ்புக், ட்விட்டர் உங்களை சுயநலவாதியாக்கிவிடும்: ஆர்எஸ்எஸ் தலைவர் எச்சரிக்கை


social-media-use-can-make-people-egoist

  • பாரதி ஆனந்த்
  • Posted: 21 Mar, 2018 13:00 pm
  • அ+ அ-

ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூகவலைதளங்கள் மக்களை சுயநலவாதிகளாக்கிவிடும் என ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் எச்சரித்துள்ளார்.

மேலும், தான் ஏன் ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூகவலைதளங்களில் இணையவில்லை என்பது குறித்தும் விளக்கமளித்துள்ளார். 

சமூகவலைதளங்கள் ஒருவரை அகங்கொண்டவராக தன்னலமுடையவராக மாற்றிவிடும் என்பதாலேயே தான் அவற்றில் இணையவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.


சமூக வலைதளங்கள் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த பகவத், "சமூக வலைதளங்களை ஒட்டுமொத்தமாக புறக்கணித்துவிட முடியாது. அவை நிச்சயமாக பயனுள்ளவையே ஆனால் அது அதை நாம் எப்படிப் பயன்படுத்திகிறோம் என்பதைப் பொறுத்தது. அதன் பக்கவிளைவுகளை அறிந்து நாம் செயல்பட வேண்டும். ஏனெனில், அது உங்களை அகங்கொண்டவராக தன்னலமுடையவராக மாற்றிவிடத்தக்கது.


சமூகவலைதளம் என்பதற்கு என்னைப்பொறுத்தவரை நான், எனது, என்னுடையது என்பதே அர்த்தம். எனது கருத்து தனிப்பட்ட கருத்து அல்ல அது பொதுப்படையான கருத்து என்பதைத் தெரிந்தேகூட பல நேரங்களில் நாம் அத்தகைய கருத்துகளை சமூகவலைதளங்களில் பகிரும் சூழல் ஏற்படுகிறது. இதனால், பலநேரங்களில் நாம் தவறாகப் புரிந்துகொள்ளப்படும் சூழலுக்கு தள்ளப்படுகிறோம். நமது ஸ்வயம்சேவகர்கள்கூட இத்தகைய நெருக்கடியைச் சந்திக்க நேர்கிறது.


ஃபேஸ்புக் என்ற பெயரே அது உங்களை தனிப்பட்ட நபர் என்று அடையாளம் காட்டுகிறது. அது உங்களை தன்னலமுடையவராக மாற்றிவிடும். அதேவேளையில், சுய ஊக்குவிப்பு என்பதில் தனிப்பட்ட நபருக்கே கட்டுப்பாடுகள் விதிக்கமுடியும் அமைப்புகளுக்கு அல்ல. அதன் காரணமாகவே ஆர்.எஸ்.எஸ். தனியாக ஃபேஸ்புக், ட்விட்டர் பக்கம் வைத்துள்ளது" என்றார்.
 

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close