[X] Close

மிதக்கும் கைத்தறி கூடங்கள்!- நாட்டிலேயே முதன்முறையாக மணிப்பூரில் தொடக்கம்


north-easts-first-water-handloom-hut-opened-in-manipur

  • பாரதி ஆனந்த்
  • Posted: 12 Nov, 2018 11:34 am
  • அ+ அ-

நாட்டிலேயே முதன்முறையாக மணிப்பூர் மாநிலத்தில் மிதக்கும் கைத்தறி கூடங்கள் திறக்கப்பட்டுள்ளன.

வடகிழக்கு மாநிலங்களில் மிதக்கும் கைத்தறி கூடங்களை நிறுவி சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க திட்டமிடப்பட்டது. அதன்படி மணிப்பூரில் பிஷ்ணுபூர் மாவட்டத்தில் லோக்தக் ஏரியில் மிதவை கைத்தறிக் கூடங்கள் அமைக்கப்பட்டன.

இந்த கைத்தறிக் கூடங்கள் உள்ளூர் வாசிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டிருக்கிறது. திரிபுரா மாநில பழங்குடி மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மேவர் குமார் ஜமாதியா இந்தத் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

இது குறித்து ஆடைகள் மற்றும் கைத்தறி துறை இயக்குநர் லாம்லீ கமேய் கூறும்போது, "இது பரிச்சார்த்த முறையிலேயே துவக்கப்பட்டுள்ளது. பெண்களை கைத்தறி தொழிலில் ஈடுபட ஊக்குவிப்பதே இத்திட்டத்தின் நோக்கம். இந்தத் திட்டம் வெற்றி பெற்றால் இதை நாடு முழுவதும் அமல்படுத்துவோம்" என்றார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close