[X] Close

சத்தீஸ்கர் தேர்தலில் வாக்களித்த 100 வயது மூதாட்டி


chattisgarh-polls-100-years-old-woman-casts-vote

  • பாரதி ஆனந்த்
  • Posted: 12 Nov, 2018 10:50 am
  • அ+ அ-

சத்தீஸ்கர் மாநிலத்தில் இன்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், தோர்னாபால் தொகுதியில் 100 வயது மூதாட்டி ஒருவர் வாக்களித்து தனது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினார்.

சத்தீஸ்கர் மாநில சட்டப்பேரவைக்கான முதல் கட்ட தேர்தலில் 18 தொகுதிகளில் இன்று பலத்த பாதுகாப்புகளுக்கு இடையே வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. 
190 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.  தேர்தல் ஆணையத் தரவுகளின்படி 31,80,014 வாக்காளர்கள் உள்ளனர். 
இந்நிலையில் தோர்னாபால் மாவட்டத்தில் உள்ள விஸ்வாஸ் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் இன்று காலை 100 வயது மூதாட்டி ஒருவர் வாக்களித்தார்.

அவரை அவரது மகன் அழைத்து வந்திருந்தார். தள்ளாத வயதும் நலிந்து உடல்நிலையும் அந்தப் பாட்டியை ஜனநாயக் கடமையாற்றுவதில் இருந்து தடுக்கவில்லை.

அந்தப் பாட்டியை வாக்குச்சாவடியில் இருந்தவர்கள் ஆர்ச்சயத்துடன் பார்த்தனர். தள்ளாத வயதிலும் தனது கடமையாற்ற 
சத்தீஸ்கர் மாநிலத்துக்கு இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுகிறது. இரண்டாம் கட்டமாக நவம்பர் 20-ம் தேதி மீதமுள்ள 72 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறவுள்ளது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close