[X] Close

90-வயது பாட்டியை அடித்து துன்புறுத்திய பெண்ணுக்கு பேஸ்புக் மூலம் கிடைத்த தண்டனை


old-women-beats-up

  • போத்திராஜ்
  • Posted: 19 Mar, 2018 17:29 pm
  • அ+ அ-

கேரள மாநிலம், கண்ணூர் அருகே, 90வயது மூதாட்டியை செருப்பால் அடித்து துன்புறுத்திய பேத்தியிந் செயலின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதையே ஆதாரமாகக் கொண்டு போலீஸார் வழக்குப்பதிவு செய்து, அந்த பெண்ணை கைது செய்தனர்.

கண்ணூரைச் சேர்ந்தவர் தீபா(வயது40). இவர் தனது தாய், பாட்டி கல்யாணி(90வயது), 2 குழந்தைகள் ஆகியோருடன் வசித்து வருகிறார். சமீபத்தில் தீபாவுக்கு வேலை பறிபோனது இதனால், மிகுந்த வேதனையில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

அதனால் பணப்பற்றாக்குறை காரணமாக தொடர்ந்து குடும்பத்துக்குள் சண்டை நீடித்து வந்துள்ளது இந்நிலையில், கடந்த சிலநாட்களுக்கு தனதுபாட்டி கல்யாணி வீட்டு வாசலில் அமர்ந்திருந்தார். அப்போது தனது பாட்டி கல்யாணி அம்மாளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை கையாலும், செருப்பாலும் தீபா தாக்கி துன்புறுத்தியுள்ளார். மேலும், கல்யாணி அம்மாள் அமர்ந்திருந்த போர்வையோடு அவரை தரையில் தரதரவென இழுத்துச் சென்று கீழே தள்ளினார். அடி தாங்க முடியாமல், அவரின் பாட்டி கல்யாணி அலறினார்.

. இந்த காட்சிகள் அனைத்தையும் யாரோ சிலர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்தனர்.

இதையடுத்து, இந்த வீடியோ பேஸ்புக்கில் வைரலாகப் பரவியது. 90 வயது முதிய பெண்ணை மனிதநேயமின்றி முரட்டுத்தனமாக தாக்கிய பெண்ணை  கைது செய்ய வலியுறுத்தினர்.

சமூக வலைதளங்களில் வந்த வீடியோவை ஆதாரமாக எடுத்த கண்ணூர் போலீசார், ஐபிசி 323 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து தீபாவை கைது செய்தனர். மேலும், தீபாவின் தாய், பாட்டி கல்யாணி ஆகியோரை அரசு காப்பகத்துக்கு அனுப்பி வைத்தனர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close