[X] Close

சொல்லிக் கொள்ள ஒன்றுமில்லை என்பதால் அமைதியா?- மோடிக்கு பிரகாஷ் ராஜ் கேள்வி


are-u-silent-because-there-is-nothing-to-boast-about-it

பணமதிப்பு நீக்கத்தின் போது வங்கியில் காத்திருந்த பொதுமக்கள்

  • பாரதி ஆனந்த்
  • Posted: 08 Nov, 2018 13:04 pm
  • அ+ அ-

பெருமை பேசிக் கொள்ள ஒன்றுமில்லை என்பதால் பணமதிப்பு நீக்கம் குறித்து பேசாமல் அமைதியாக இருக்கிறீர்களா என்று பிரதமர் மோடிக்கு கேள்வி எழுப்பியுள்ளார் நடிகர் பிரகாஷ் ராஜ்.

#Justasking என்ற தலைப்பின் கீழ் பிரதமர் நரேந்திர மோடிக்கும், மத்திய அரசுக்கும் அவ்வப்போது பிரகாஷ் ராஜ் கேள்வி எழுப்பி வருகிறார்.

இந்நிலையில், இன்று அவர் பதிவு செய்துள்ள ட்வீட்டில், "அன்புள்ள பிரதமரே இந்த நாள் அந்தக் காலம்.. உங்களது பணமதிப்பு நீக்கம் சாமான்ய மனிதனை சீரழித்த நாள் இன்று.. அதைப் பற்றி பெருமை பேசிக் கொள்ள ஒன்றுமில்லை என்பதால் நீங்கள் அமைதியாக இருக்கிறீர்களா?" எனப் பதிவிட்டுள்ளார்.

2016 நவம்பர் 8 இரவு பணமதிப்பு நீக்கம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தொலைக்காட்சி வாயிலாக அறிவித்தார். இன்றுடன் பணமதிப்பு நீக்கம் அறிவிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன.

வாக்களிக்கலாம் வாங்க

காற்றின் மொழி உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close