[X] Close

ஆன்லைனில் விற்கப்படும் பொருட்களில் ஐந்தில் ஒன்று போலியானது: ஆய்வு தரும் அதிர்ச்சி முடிவுகள்


online-sales

  • kamadenu
  • Posted: 07 Nov, 2018 17:44 pm
  • அ+ அ-

ஆன்லைனில் விற்கப்படும் பொருட்களில் ஐந்தில் ஒன்று போலியாக உள்ளதாக ஆய்வொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லோக்கல் சர்க்கிள் என்னும் இணையதளம் இந்தியா முழுவதும் உள்ள 200 நகரங்களில் இந்த ஆய்வை நடத்தியது.

கடந்த ஆறு மாதங்களில், ஆன்லைன் மூலம் போலியான பொருட்கள் விற்கப்பட்டதாக சுமார் 20% வாடிக்கையாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆன்லைனில் விற்கப்படும் பொருட்களில் ஐந்தில் ஒன்று போலியானது. இதில் அதிகமானவை ஒப்பனை மற்றும் வாசனைத் திரவியங்களுக்கான பொருட்கள் ஆகும்.

எந்த ஆன்லைன் வணிக நிறுவனம் அதிக அளவில் போலியான பொருட்களை விற்பனை செய்கிறது என்ற கேள்விக்கு 37 சதவீதம் பேர் ஸ்நாப்டீல் என்று தெரிவித்துள்ளனர். அமேசான் என 20 சதவீதம் பேரும் பிளிப்கார்ட் என 22 சதவீதம் பேரும், பேடிஎம் மால் என 21 சதவீதம் பேரும் கூறியுள்ளனர்.

ஆன்லைன் பொருட்களில் எது போலியானது என்பதை எப்படிக் கண்டறிவது என்பது உங்களுக்குத் தெரியுமா என்ற கேள்விக்கு தெரியாது என 69% பேர் தெரிவித்துள்ளனர். 16% பேர் தெரியும் எனவும் 15% பேர் சொல்ல முடியாது என்றும் தெரிவித்துள்ளனர்.

எந்தப் பொருட்களில் போலிகள் அதிகம் இருக்கின்றன என்ற கேள்விக்கு நறுமண மற்றும் ஒப்பனைப் பொருட்களில் 35 சதவீதம் என்றும் விளையாட்டுக்குத் தேவையான உபகரணங்களில் 22 சதவீதம் போலி என்றும், 5 சதவீதப் பைகள் போலியாக இருக்கின்றன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல ஆன்லைனில் பொருட்களை விற்கும் நிறுவனங்களின் முழு விவரங்களை (பெயர், முகவரி, தொலைபேசி எண், ஜிஎஸ்டிஎன்) ஆன்லைன் நிறுவனங்கள் வெளியிட்டால் போலிகளின் எண்ணிக்கை குறையுமா என்ற கேள்விக்கு ஆம் என்று 78% பேரும் இல்லை என்று 14% பேரும் கருத்து தெரிவித்துள்ளனர். 8 சதவீதம் பேர் கருத்து எதுவும் இல்லை என்று கூறியுள்ளனர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close