[X] Close

வரலாறு படைத்த கர்நாடக முதல்வர், அனிதா குமாரசாமி; ஒன்றாக சட்டப்பேரவை செல்லும் கணவன், மனைவி


kumarsamy-anitha-kumarsamy

  • kamadenu
  • Posted: 07 Nov, 2018 13:59 pm
  • அ+ அ-

கர்நாடக முதல்வர் குமாரசாமி மற்றும் அவரின் மனைவி அனிதா குமாரசாமி ஆகிய இருவரும் சட்டப்பேரவைக்கு ஒன்றாகச் செல்லும் கணவன், மனைவி என்ற சாதனையைப் படைத்துள்ளனர்.

பாஜக வேட்பாளர் எல்.சந்திரசேகரை 1.09 லட்ச வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து சாதனை படைத்தார் ராமநகரத் தொகுதி வேட்பாளர் அனிதா குமாரசாமி.

முன்னதாக அத்தொகுதியில் இருந்து விலகி, மீண்டும் காங்கிரஸில் இணைவதாக அறிவித்திருந்தார் பாஜக வேட்பாளர் சந்திரசேகர். எனினும் சட்டபூர்வமாக அவரே பாஜக வேட்பாளராக இருந்தார்.

இதுகுறித்துக் கருத்துத் தெரிவித்த மதச்சார்பற்ற ஜனதா தள எம்எல்ஏ கே.கோபாலையா, முதல்வர் தனது மனைவியுடன் சட்டப்பேரவைக்கு வருவது அரிய நிகழ்வு. முதல்வரும் அவரின் மனைவியும் எம்எல்ஏக்களாக ஒன்றாக சட்டப்பேரவைக்கு வருவதை எங்கும் பார்த்ததில்லை.

முன்னதாக இருவரும் இதேபோல இணைந்து சட்டப்பேரவைக்கு வந்திருக்கின்றனர். அப்போது குமாரசாமி ராமநகர எம்எல்ஏவாக இருந்தார். அனிதா குமாரசாமி மதுகிரி சட்டப்பேரவைத் தொகுதி எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்றார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close