[X] Close

காவல் துறையினர் கட்டுப்பாட்டுக்குள் வந்தது சபரிமலை; பாதுகாப்பு பணிக்காக முதன்முறையாக சன்னிதானத்துக்கு வந்த பெண் போலீஸார்


police-in-sabarimala

  • kamadenu
  • Posted: 06 Nov, 2018 09:24 am
  • அ+ அ-

சபரிமலையில் சித்திரை ஆட்டத் திருநாள் பூஜைக்காக ஐயப்பன் கோயில் நடை நேற்று மாலை திறக்கப்பட் டது. சபரிமலை வரலாற்றில் முதன்முதலாக சன்னிதானம் பகுதியில் பெண் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடு படுத்தப்பட்டுள்ளனர்.

கேரளாவில் உள்ள சபரி மலை ஐயப்பன் கோயிலுக் குள் அனைத்து வயது பெண் களையும் அனுமதிக்க வேண் டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதற்கு இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. இந்நிலையில், கடந்த மாதம் 17-ம் தேதி ஐப்பசி மாத பூஜைக்காக ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டது. இளம் வயது பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து போராட் டங்களும் அதை கட்டுப் படுத்த தடியடியும் நடந் தது.

144 தடை உத்தரவு

இந்நிலையில் சித்திரை ஆட்டத் திருநாள் பூஜைக் காக சபரிமலை கோயில் நடை நேற்று மாலை மீண்டும் திறக் கப்பட்டது. முன்னெச்ச ரிக்கையாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக கோயில் நடை மீண்டும் வரும் 16-ம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்பட உள்ளது. முக்கிய சீசன் என்பதால் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். எனவே, கேரள போலீஸார் அப்போது எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை இந்த விழாவில் முன்கூட்டியே நடைமுறைப்படுத்தி பார்த் தனர்.

நேற்று முன்தினம் சபரி மலை நோக்கி வந்த பக்தர் களை நிலக்கல் பகுதியி லேயே போலீஸார் தடுத்து நிறுத்தினர். நேற்று காலை 6 மணிக்கு அவர்கள் சன்னி தானத்துக்கு செல்ல அனு மதிக்கப்படுவார்கள் என போலீஸார் கூறியிருந்தனர். ஆனால் அவ்வாறு அனு மதிக்கவில்லை. அரசு பேருந்து மூலமாவது நிலக் கல்லில் இருந்து பம்பைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். அதன் பின்னர் அனைவரும் அனுமதிக்கப்பட்டனர்.

சபரிமலையின் 40 கிமீ சுற்றளவு பகுதிகள் காவல் துறையின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது. சுமார் 2000 ஆண் காவலர்கள், 50 பெண் காவலர்கள், 20 பேர் கொண்ட கமாண்டோ படையினரும் பாது காப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

வரலாற்றிலேயே முதன் முறையாக சன்னிதானம் பகுதியில் 50 வயதைக் கடந்த 15 பெண் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பெண்கள் மலைக்கு வந்தால் அவர்களை பாதுகாப்பாக அழைத்துச் செல்லும் பொறுப்பு இவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. சபரி மலையில் பக்தர்கள் கடுமை யான சோதனைக்கு பின் னரே நடைபந்தலுக்கு அனு மதிக்கப்படுகின்றனர். நேற்று இரவு சன்னிதானத்தில் தங்க வும் பக்தர்கள் அனுமதிக் கப்படவில்லை. சன்னிதானத் தில் 12 கேமராக்கள் மூலம் தரிசனத்துக்கு வரும் பக்தர் கள் பதிவு செய்யப்படு கின்றனர். சபரிமலையில் கடும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருப்பது வருத் தம் அளிப்பதாக பந்தளம் அரச குடும்பத்தினர் தெரி வித்துள்ளனர்.

ஜாமர் கருவி பொருத்தம்

கேரள அறநிலையத் துறை அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் கூறும்போதும, “இளம் வயது பெண்கள் வந்தால் உச்ச நீதிமன்ற உத்தரவை மதித்து, முழு பாதுகாப்பு வழங்குவோம். அதேநேரத்தில் சமூக செயற் பாட்டாளர்கள் வந்து தேவை யில்லாமல் பிரச்னைகளை உருவாக்கக் கூடாது” என் றார்.

கோயில் மேல்சாந்தி உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி கூறும்போது, “இளம் வயது பெண்கள் கோயிலுக் குள் வந்து, ஆச்சாரம் மீறப் பட்டால் நடையை சாத்தி விட்டு ‘சுத்தி கலசம்’ (சுத்தப் படுத்துதல்) செய்வோம்” என்றார். இந்நிலையில், காவல் துறை ஐ.ஜி. அஜித் குமார் மேல்சாந்தியை சந் தித்து பேசினார். சன்னிதானத் தில் தந்திரிகள், மேல்சாந்தி யின் அறைகளில் செல் போன்களை செயலிழக்கச் செய்யும் ஜாமர் கருவி பொருத்தப்பட்டுள்ளது. பத்தி ரிகையாளர்கள் அவர்களை தொடர்புகொள்வதைத் தடுக்க போலீஸார் இந்த நடவடிக்கையை எடுத் துள்ளதாகக் கூறப்படுகிறது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close