[X] Close

உண்மை வெளிவரும்!- அமிர்தசரஸ் ரயில் விபத்து விசாரணைக்கு வந்த சித்து மனைவி பேட்டி


truth-will-come-out

  • பாரதி ஆனந்த்
  • Posted: 02 Nov, 2018 17:01 pm
  • அ+ அ-

அமிர்தசரஸ் ரயில் விபத்து விசாரணைக்கு ஆஜராக வந்த நவ்ஜோத் சிங் சித்துவின் மனைவி நவ்ஜோத் கவுர் விரைவில் உண்மை வெளிவரும் எனத் தெரிவித்திருக்கிறார்.

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் ராவணனை வதம் செய்யும் நிகழ்ச்சியில் ஒருபகுதியாக பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகருக்கு அருகில் உள்ள ஜோதா பதக் என்ற இடத்தில் ராவண வதம் நிகழ்ச்சி நடைபெற்றது.

அப்போது, தண்டவாளத்தில் நின்று நிகழ்ச்சிகளைப் பார்த்துக் கொண்டிருந்த பொதுமக்கள் மீது ரயில் மோதியதில் 60 பேர் அதே இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 80-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இதில் இன்னும் பலர் உயிருக்குக் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக நவ்ஜோத் சிங் சித்துவின் மனைவி நவ்ஜோத் கவுர் வந்திருந்தார். அவர் நிகழ்ச்சிக்கு தாமதமாக வந்ததாலேயே அந்த நேரத்தில் மக்கள் தண்டவாளத்தில் நிற்க நேர்ந்தது. அதனாலேயே விபத்து நேர்ந்தது என் எதிர்க்கட்சியினர் விமர்சித்தனர்.
இந்நிலையில் அவர் இன்று விசாரணைக்கு ஆஜரானார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நவ்ஜோத் கவுர், "இது மிக முக்கியமான கட்டம். விபத்து குறித்து பல அவதூறுகள் பரப்பப்பட்டு வருகின்றன. விரைவில் உண்மை வெளிவரும். சித்து ஊரில் இல்லை என்பதால் என்னிடம் விசாரணை ஆணையத்திடம் அளிக்க ஒரு கடிதம் கொடுத்து அனுப்பியிருக்கிறார்" என்றார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close