[X] Close

ஊடகத்தினரை தாக்குவது நோக்கமில்லை: மாவோயிஸ்டுகள் விளக்கம், போலீஸ் ஏற்க மறுப்பு 


exam-invigilator-flying-squad-theni-exam-2-exam-invigilationnaxals-say-didn-t-intend-to-target-dd-crew-police-punctures-claim

நக்சல்களின் கடிதம்

  • கார்த்திக் கிருஷ்ணா
  • Posted: 02 Nov, 2018 12:31 pm
  • அ+ அ-

தடைசெய்யப்பட்ட மாவோயிஸ்ட் இயக்கமான கம்யூனிஸ்ட் பார்டி ஆஃப் இந்தியா, சமீபத்தில் சத்தீஸ்கரின் தந்தேவாடா பகுதியில் நடந்த தாக்குதல் குறித்து விளக்கம் அளித்துள்ளது.

தூர்தர்ஷன் செய்தி ஒளிப்பதிவாளர் அச்யுதானந்த் சாஹூவைக் கொலை செய்வது தங்களது நோக்கம் அல்ல என்றும், சாஹூ ஊடகத்தைச் சேர்ந்தவர் என்பது தங்களுக்குத் தெரியாது என்றும் அந்த அமைப்பின் சார்பில் அளிக்கப்பட்டுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் தந்தேவாடா எஸ்பி அபிஷேக் பல்லவ், மாவோயிஸ்டுகளின் விளக்கத்தை நிராகரித்துள்ளார். ஊடகத்தை தாக்குவது அவர்கள் நோக்கம் இல்லையென்றால் எதற்காக சாஹூவின் கேமராவை அவர்கள் திருடிச்செல்ல வேண்டும் என்று அவர் கேள்வியெழுப்பியுள்ளார். மேலும் சாஹூ எவ்வளவு மோசமாக தாக்கப்பட்டார் என்பது குறித்தும் அவர் விவரித்துள்ளார். 

"ஏன் கேமராவை திருடவேண்டும்? முதல் முறையாக, அவர்கள் தப்பிச் செல்லும்போது, இரண்டு தானியங்கி ஆயுதங்களை விட்டுச் சென்றனர். ஆனால் கேமராவை விடவில்லை. ஏன்? ஏனென்றால் முதல் சில நிமிடங்களில் அங்கு என்ன நடந்தது என்பதற்கான ஆதாரம் அதில் பதிவாகியுள்ளது. பல தோட்டா காயங்கள், மண்டை எலும்புகளில் பல முறிவுகள் என ஒளிப்பதிவாளர் காயம்பட்டத்தைப் பார்த்தால் இது தவறாக நடந்த தாக்குதல் அல்ல. அவர் போஸ்டர்களை படம்பிடிப்பதை 10 நிமிடங்கள் பார்த்தபின்னரே பதுங்கியிருந்து தாக்கினர். 

இந்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை முறியடித்த எனது தைரியமான வீரர்களுக்கு வணக்கம் சொல்கிறேன். இதில் 200க்கும் அதிகமான நக்சல்கள் எதிர்க்க முடியாமல் தப்பிச் சென்று, போகும்போது பல ஆயுதங்களையும் விட்டுச் சென்றனர். ஊடகத்தினர் இரண்டு பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர். 3 நக்சல்கள் கொல்லப்பட்டு உடல் தகனம் செய்யப்பட்டுள்ளது. ஒரு நக்சலுக்கு கையில் அடிபட்டுள்ளது" என்று அபிஷேக் கூறியுள்ளார். 

மாவோயிஸ்டுகள் தங்கள் கடிதத்தில், இனி பாதுகாப்பு அதிகாரிகளுடன் இந்த பகுதிகளுக்கு ஊடகம் வரக்கூடாது என்றும் எச்சரித்துள்ளனர். 

"நாங்கள் ஊடகத்தை நோக்கத்துடன் தாக்குவதில்லை. தாக்குதலுக்கு நடுவில் மாட்டிக்கொண்டதாலேயே டிடி ஒளிப்பதிவாளர் அச்யுதானத் சாஹூ கொல்லப்பட்டார். எங்களுக்கு ஊடகத்தை தாக்கும் எண்ணம் இல்லை. தேர்தல் தயாரிப்புக்காக, தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்படும் ஊடகத்தினர் மற்றும் அதிகாரிகள், இந்த பகுதிகளுக்கு பாதுகாப்பு அதிகாரிகள் இல்லாமல் வாருங்கள்" என்று மாவோயிஸ்டுகளின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

சத்தீஸ்கரில் நவம்பர் 12 மற்றும் 20 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக தேர்தல் நடக்கவுள்ளது. 
- ஏ.என்.ஐ

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close