ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயலின் மனைவி அனிதா கோயல், புற்றுநோய் பாதிப்பால் இன்று அதிகாலை, காலமானார்.
ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயலின் மனைவி அனிதா கோயல். இவர் புற்று நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சைப் பலனளிக்காமல் இன்று அதிகாலை 3 மணியளவில் காலமானார்.
ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் நிர்வாக துணைத் தலைவராக அனிதா கோயல் இருந்தார். பணமோசடி வழக்கு தொடர்பாக ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயல் கடந்த ஆண்டு செப்டம்பர் 1ம் தேதி அன்று கைது செய்யப்பட்டார்.
ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு கனரா வங்கியிலிருந்து வழங்கப்பட்ட ரூ.538.62 கோடி கடன் தொகையை மோசடி செய்ததாக நரேஷ் கோயல் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அமலாக்கத்துறை தனது குற்றப்பத்திரிகையை சமர்ப்பித்தபோது, நரேஷ் கோயல் மனைவி அனிதா கோயலும் கைது செய்யப்பட்டார்.
எனினும், அனிதா கோயலின் வயது மற்றும் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு அதே நாளில் சிறப்பு நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது. இந்நிலையில், பல்வேறு உடல்நல பாதிப்புகளால் அவதிப்பட்டு வந்த நரேஷ் கோயலுக்கு பாம்பே உயர்நீதிமன்றம் மனிதாபிமான அடிப்படையில் கடந்த 6ம் தேதி இடைக்கால ஜாமீன் வழங்கியது.
இச்சூழலில் அனிதா கோயல் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது இறுதிச்சடங்கு மும்பையில் இன்று நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நரேஷ் கோயல் - அனிதா கோயல் தம்பதிக்கு நம்ரதா கோயல் என்ற மகளும், நிவான் கோயல் என்ற மகளும் உள்ளனர்.
இதையும் வாசிக்கலாமே...
இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி ஓய்வு அறிவிப்பு... உருகும் ரசிகர்கள்
வீடியோ காலில் மனைவியை பயமுறுத்த தூக்குமாட்டிய ஜிம் பயிற்சியாளர்... கயிறு இறுகி உயிரிழந்த பரிதாபம்!