படிப்பதில் மட்டுமல்ல குடிப்பதிலும் முன்னிலை... கேரளாவில் ரூ.19,088 கோடிக்கு மது விற்பனை!


மது விற்பனை

கேரளாவில் கடந்த நிதியாண்டில் வரலாறு காணாத வகையில் மது விற்பனையாகியுள்ளது. கடந்த நிதியாண்டில் ரூ.19,088 கோடி மதிப்பிற்கு மது விற்பனையாகியுள்ளது.

படிப்பில் மட்டுமின்றி மது குடிப்பதிலும் கேரள மக்கள் முன்னேறி வருகின்றனர். கடந்த நிதியாண்டில் கேரளாவில் வரலாறு காணாத லகையில் மது விற்பனை நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த நிதியாண்டில் ரூ.19,088 கோடி மதிப்பிற்கு மது விற்பனையாகியுள்ளது.

மது பாட்டில்கள்

கேரளாவில் கடந்த 2022-23-ம் ஆண்டில் 18,510.98 கோடி ரூபாய்க்கு மது விற்பனையாகியுள்ளதாகவும், மதுபான விற்பனை மீதான வரி மூலம் அரசு கருவூலத்துக்கு ரூ.16,609.63 கோடி கிடைத்துள்ளது என்றும் அரசு தெரிவித்துள்ளது.

கேரளாவில் மதுபான கழகத்திற்கு சொந்தமாக 277 சில்லரை விற்பனை நிலையங்கள் மூலம் மது விற்பனை செய்யப்படுகிறது. மேலும் நுகர்வோர் மத்திய வங்கியின் கீழ் 39 விற்பனை நிலையங்கள் உள்ளன. கேரளா மாநிலத்தின் 3.34 கோடி மக்கள் தொகையில் 29.8 லட்சம் ஆண்களும், 3.1 லட்சம் பெண்களும் மது அருந்துவதாக கூறப்படுகிறது. நாள் ஒன்றுக்கு சுமார் 5 லட்சம் பேர் கேரளாவில் மது குடிக்கின்றனர்.

மது விற்பனை

கேரள மாநிலத்தில் விற்பனை செய்யப்படும் மதுவில் 80 சதவீதம் பல்வேறு மாநிலங்களில் இருந்து கொண்டு செல்லப்படுகிறது. ​​20 சதவீத மது மட்டுமே கேரளாவில் உற்பத்தி செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...

x