[X] Close

100-க்கு 98 மார்க்; வயசு 96!- சாதனை பாட்டிக்கு குவியுது பாராட்டு


karthiyayani-amma-age-96-tops-the-exam

  • பாரதி ஆனந்த்
  • Posted: 01 Nov, 2018 10:08 am
  • அ+ அ-

சாதனைக்கு வயது எப்போதுமே தடையில்லை. அதிலும் குறிப்பாக கல்வியறிவு பெறுவதற்கு நிச்சயமாக வயது முட்டுக்கட்டையே அல்ல.

கேரளாவைச் சேர்ந்த 96 வயதுடைய பாட்டி அக்‌ஷரலக்‌ஷம் எழுத்தறிவு இயக்கத் தேர்வில் 98/100 மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளார்.
கேரளா மாநிலத்தில் ஆலப்புழா மாவட்டத்தின் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் நடத்தப்பட்ட அக்‌ஷரலக்‌ஷம் எழுத்தறிவு இயக்கத் தேர்வில் 96 வயதுடைய கார்த்தியானி அம்மாள் என்ற மூதாட்டி எழுதினார்.

தேர்வு எழுதிய நாளிலேயே இவர் இந்திய அளவில் செய்தியானார். அன்றைய வாய்மொழித் தேர்வில் அவர் முதல் மதிப்பெண்ணும் பெற்றிருந்தார்.

இந்நிலையில் எழுத்துத்தேர்வு முடிவு வெளியாகியுள்ளது. இதில் அவர் 100-க்கு 98 மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளார். 
அக்‌ஷரலக்‌ஷம் கல்வி இயக்கத்தில் சேர்ந்து பயில்பவர்களுக்கு வாசித்தல், எழுதுதல், கணிதம் ஆகியவற்றின்  அடிப்படையில் ஆண்டுத்தேர்வுகள் நடத்தப்படுகின்றன. 

அவ்வகையில் இந்த ஆண்டு நடைபெற்ற இறுதித் தேர்வை எழுதியவர்களில் 42,933 பேர் வெற்றி பெற்றனர். தேர்வில் பங்கேற்ற 40 ஆயிரத்து 440 பேரில் கார்த்தியானி அம்மாள் தான் மிக வயதானவர். இந்த தேர்வில் சிறையில் இருந்தபடி படித்து வந்த 8 கைதிகளும் தேர்வெழுதினார்கள். 

 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close