[X] Close

உலகிலேயே உயரமான வல்லபாய் சிலை: வடிவமைத்தது யார்? - முக்கிய தகவல்கள்


prime-minister-dedicates-sardar-patel-s-statue-of-unity-to-nation

  • நெல்லை ஜெனா
  • Posted: 31 Oct, 2018 14:52 pm
  • அ+ அ-

அகமதாபாத்

இந்தியாவின் முதல் துணை பிரதமர் சர்தார் வல்லபாய் படேலுக்கு குஜராத் மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ள உலகிலேயே மிக உயர்ந்த சிலையை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்துள்ளார். ஒற்றுமையின் சிலை என குறிப்பிடப்பட்டுள்ள இந்த சிலை குறித்த சில முக்கிய தகவல்கள்:

* 182 மீட்டர் அல்லது 597 அடி உயரம் கொண்ட உலகின் மிக உயர்ந்த சிலை

* உலகின் மிக உயர்ந்த சிலையாக இதுவரை இருந்து வரும்

ஸ்பிரிங் புத்தா சிலையை விடவும் 177 அடி அதிகமாக உயரம் கொண்டது சர்தார் வல்லபாய் படேல் சிலை.

* நியூயார்க்கில் உள்ள சுதந்திர தேவிச் சிலையை விடவும் இரண்டு மடங்கு உயரம் கொண்டது

* சர்தார் படேல் சிலையை அமைக்க ஆன செலவு ரூ. 2,989 கோடி.

* சிலையை வடிவமைத்தது பத்ம பூஷண் விருது பெற்ற ராம் வி சுதர்.

* எல் அண்ட் டி நிறுவனமும், சர்தார் சரோவர் நர்மதா நிகாம் லிமிடெட் நிறுவனமும் இணைந்து சிலையை உருவாக்கியுள்ளன.

* குஜராத்தில் நர்மதா ஆற்றின் குறுக்கே உள்ள பிரமாண்டமான சர்தார் சரோவர் அணையின் அருகே இந்த சிலை உள்ளது.

* சர்தார் படலை பற்றிய 40 ஆயிரம் ஆவணங்கள், 2 ஆயிரம் படங்கள் கொண்ட அருங்காட்சியகம் உள்ளது.

* சிலையின் உட்பகுதியில் 153 மீட்டர் உயரம் வரை ஏறிச் சென்று சுற்றுலா பயணிகள், 200 பேர் ஒரே நேரத்தில் நின்று பார்வையிடும் வகையில் பார்வையாளர் மாடமும் உள்ளது.

* இங்கிருந்தபடி ஆயிரத்து 210 மீட்டர் நீளம் கொண்ட பிரமாண்டமான சர்தார் சரோவர் அணையை கண்டு களிக்கலாம்.

* சிலையின் அருகே உள்ள விந்திய மலை மற்றும் சத்புராவையும் சுற்றுலா பயணிகள் கண்டு மகிழ முடியும்.

* இந்த சிலையை பார்ப்பதற்காக நாள்தோறும் 15 ஆயிரம் பேர் வீதம் சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.

* சிலையை அமைக்க பயன்படுத்தப்பட்ட பொருட்கள்

70,000 ஆயிரம் டன்கள் சிமெண்ட்

18,500 டன்கள் இரும்பு கம்பிகள்

6000 டன்கள் இரும்பு கட்டுமானங்கள்

1700 டன்கள் பித்தளை, சிலையின் மேற்பகுதியில் பூசுவதற்காக பயன்படுத்தப்பட்டது.

 

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close