[X] Close

துப்பாக்கி முனையிலும் அஞ்சாத துணிச்சல்!- தூர்தர்ஷன் ஒளிப்பதிவாளர் குடும்பத்துக்கு ஸ்மிருதி இரங்கல்


my-tributes-condolences-to-loved-ones

  • பாரதி ஆனந்த்
  • Posted: 31 Oct, 2018 13:51 pm
  • அ+ அ-

சத்தீஸ்கரில் நக்சல் தாக்குதலில் பலியான தூர்தர்ஷன் ஒளிப்பதிவாளரின் இறுதி வீடியோவைப் பார்த்துவிட்டு இரங்கல் தெரிவித்திருக்கிறார் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி.

சத்தீஸ்கர் மாநிலத்தில் தண்டேவாடா வனப்பகுதியில் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் தூர்தர்ஷன் தொலைக்காட்சியைச் சேர்ந்த ஒளிப்பதிவாளர் ஒருவர் பலியானார். இரண்டு பாதுகாப்புப் படை வீரர்களும் உயிரிழந்தனர்.

இந்நிலையில், நக்சல்களால் கொல்லப்பட்ட அந்த கேமராமேன் பேசிய கடைசி வார்த்தைகள் அடங்கிய வீடியோ இணையத்தில் தற்போது வெளியாகி காண்போரை நெகிழச் செய்து வருகிறது.

இதை அவரே அவரது கேமராவில் எடுத்துள்ளார். 

இது குறித்து ஸ்மிருதி இராணி, "ஈடுஇணையற்ற துணிச்சல். துப்பாக்கி முனையிலும் அஞ்சாத துணிச்சல். எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். குடும்பத்தினருக்கு எனது ஆறுதல் உரித்தாகுக" எனப் பதிவிட்டுள்ளார்.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close