[X] Close

அம்மா எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும்!- நெகிழவைக்கும் கேமராமேனின் கடைசி வார்த்தைகள்


cameraman-recorded-a-message-for-his-mother

  • பாரதி ஆனந்த்
  • Posted: 31 Oct, 2018 13:34 pm
  • அ+ அ-

அம்மா எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும்.. இதுதான் நக்சல்களால் கொல்லப்பட்ட அந்த கேமராமேன் பேசிய கடைசி வார்த்தைகள். இது இணையத்தில் தற்போது வெளியாகி காண்போரை நெகிழச் செய்து வருகிறது.

சத்தீஸ்கர் மாநிலம் தண்டேவாடாவில் நேற்று நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் தூர்தர்ஷன் கேமராமேன் ஒருவர் கொல்லப்பட்டார். இறப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்னதாக தனது வீடியோ கேமராவில் தான் பேசுவதை பதிவு செய்துள்ளார் அந்த கேமராமேன்.

வீடியோவில் அவர் பேசியதாவது:
நான் தண்டேவாடாவுக்கு தேர்தல் செய்தி சேகரிப்புக்காக வந்தேன். சாலையில் வந்து கொண்டிருந்தோம். பாதுகாப்பு வீரர்களும் இருந்தனர். திடீரென எங்களை பாதுகாப்புப் படையினர் சூழ்ந்து கொண்டனர்.

அம்மா எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும். நான் இந்தத் தாக்குதலில் இறந்துவிடுவேன் போல் தெரிகிறது.

ஆனாலும் ஏன் என்று தெரியவில்லை. எனக்கு பயமே வரவில்லை. இங்கே வீரர்கள் உள்ளனர். ஆனால் நக்சல்கள் எல்லா பக்கத்தில் இருந்தும் சுற்றி வளைத்துள்ளனர். இதுதான் இப்போது சொல்ல முடியும்.

இவ்வாறு அவர் பேசிமுடிக்கிறார்.

அந்த ஒளிப்பதிவாளர் இறந்துவிட்டார்.  உயிரிழந்தது அச்சுதானந்த் என்று தூர்தர்ஷன் கேமரா மேன் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close