ஹைதராபாத் உட்பட தெலங்கானாவின் பல பகுதிகளில் பெய்த கனமழையால், மாநிலத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் கனமழை காரணமாக 4 வயது குழந்தை உட்பட 9 பேர் பரிதாபமாக பலியாகி உள்ளனர்.
பாச்சுபல்லி பகுதியில் கனமழை காரணமாக கட்டுமானத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் தடுப்புச் சுவர் இடிந்து விழுந்ததில், 4 வயது குழந்தை உட்பட 7 பேர் உயிரிழந்ததாக போலீஸார் புதன்கிழமை தெரிவித்தனர். பாச்சுபல்லி காவல்துறையின் கூற்றுப்படி, இறந்தவர்கள் ஒடிசா மற்றும் சத்தீஸ்கரைச் சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் எனத் தெரிய வந்துள்ளது.
சுவர் இடிந்து விழுந்த விபரீதம் செவ்வாய் மாலை நிகழ்ந்திருந்தபோதும், மீட்பு பணி மற்றும் சடலங்கள் அடையாளம் காணப்பட்டதை அடுத்து புதன் மாலை, பலியானோர் விவரங்களை போலீஸார் உறுதி செய்தனர். புதன் அதிகாலையில் தொடங்கிய, சடலங்களை மீட்பதற்கான பணிகள், இடிபாடுகளை அகற்றுவதில் நிகழ்ந்த இழுபறி காரணமாக தாமதமானது.
இந்த 7 உயிர்ப்பலிகளுக்கு அப்பால், மற்றுமொரு கனமழை விபரீதம் சார்ந்த சம்பவத்தில் 2 ஆண்களின் சடலங்களை வடிகால் ஒன்றிலிருந்து போலீஸார் மீட்டனர். போலீஸார் விசாரணையில் பலியான ஆண்கள் இருவரும் சுமார் 35 வயது மதிக்கத்தக்கவர்கள் எனவும், ஒடிசாவைச் சேர்ந்த இவர்கள் எஸ்.ஆர் நகரில் உள்ள வாய்க்காலில் விழுந்து இறந்திருக்கலாம் எனவும் தெரிய வந்திருக்கிறது.
ஹைதராபாத் மற்றும் தெலங்கானாவின் பல பகுதிகளில் பெய்த கனமழையால் பொதுமக்களின் இயல்வு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. நகரின் பல இடங்களில் தண்ணீர் தேங்கி போக்குவரத்து ஸ்தம்பித்தது. பேரிடர் மீட்பு படை குழுக்கள் நகரின் பல்வேறு இடங்களில் நீர் தேங்கியுள்ள இடங்கள் மற்றும் மரங்கள் முறிந்து விழுந்த இடங்களில் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். ரொனால்ட் ரோஸ் உடன் பல்வேறு நீர் தேங்கும் பகுதிகளை அதிகாரிகள் தொடர்ந்து பார்வையிட்டு வருகின்றனர்.
இதையும் வாசிக்கலாமே...
கைவிரித்த லைக்கா... அஜித்தின் ‘விடாமுயற்சி’ அவ்வளவுதானா?
20 வருஷ கனவு... மொத்தமாக மாற போகுது கோவை... தயாராகுது புது திட்டம்!
ஏர் இந்தியா ஊழியர்கள் திடீர் வேலை நிறுத்தம்... நாடு முழுவதும் விமான சேவைகள் பாதிப்பு!
அனுபவம் பத்தாது... அரசியல் வாரிசாக அறிவித்தவரை அதிரடியாக நீக்கிய மாயாவதி
பரபரப்பு... பேருந்து பற்றி எரிந்ததால் நாசமான வாக்குப்பதிவு இயந்திரங்கள்!