மோசடியான நடைமுறைகளில் இருந்து நுகர்வோரை பாதுகாக்கவும், விதம் விதமான மோசடிகளை அம்பலப்படுத்தவும், நுகர்வோர் விவகார அமைச்சகம் பாட்காஸ்ட் விழிப்புணர்வுக்கு திட்டமிட்டுள்ளது.
மோசடி நடைமுறைகள் குறித்து நுகர்வோருக்குக் கற்பிப்பதற்கான மத்திய அரசின் உந்துதலின் ஒரு பகுதியாக, நுகர்வோர் விவகார அமைச்சகம் அத்தகைய முறைகேடுகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த உதவும் ’பாட்காஸ்ட்’ ஒன்றை அறிமுகப்படுத்துகிறது.
மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் மோசடியால் பாதிக்கப்பட்டவர்களின் அனுபவங்களை விளக்குவதற்கும், அவர்களின் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கும் பாட்காஸ்டுக்கான கதைசொல்லல் வடிவமைப்பைப் பயன்படுத்த உள்ளது. இந்த பாட்காஸ்ட் விழிப்புணர்வு தொடக்கத்தில் ஞாயிறு தோறும் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் மற்றும் யூடியூப் போன்ற சமூக ஊடக தளங்களில் வெளியாக திட்டமிடபட்டுள்ளது. அதன் பிறகு பிரத்யேக தளத்தில் இந்த பாட்காஸ்ட் வசதி செயல்பாட்டுக்கு வரும்.
பாட்காஸ்டின் முக்கிய நோக்கம் டிஜிட்டல் கல்வியறிவு பெற்ற நுகர்வோர் ஒவ்வொருவரையும் அணுகி அவர்களின் உரிமைகள் மற்றும் மோசடியை எதிர்த்துப் போராடுவதற்கான வழிமுறைகளை அவர்களுக்கு கற்பிக்கும்.
இவற்றுக்கு அப்பால் மற்றுமொரு ஏற்பாடாக, நுகர்வோர் விவகார அமைச்சகத்தின் கீழ் உள்ள சண்டிகர், பஞ்சாப், ஹரியானா, மகாராஷ்டிரா மற்றும் டெல்லியில் மாநில நுகர்வோர் தீர்வு ஆணையத்திற்கான இ-கோர்ட் வசதியும் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நுகர்வோர் தங்கள் புகார்களை விரைவாகவும், தொந்தரவின்றியும் தீர்வுகாணும் வகையில், அப்புகார்களை எளிதாக மின்-தாக்கல் செய்ய முடியும்.
அண்மை காலமாக இந்தியாவின் நுகர்வோர் பாதுகாப்பு மேலாண்மை பலப்படுத்தப்பட்டுள்ளது. உலகமயமாக்கல், தொழில்நுட்பம் மற்றும் இ-காமர்ஸ் ஆகியவற்றின் சகாப்தத்தில் நுகர்வோர் பாதுகாப்பை நிர்வகிக்கும் கட்டமைப்பை நவீனமயமாக்க, 1986-ம் ஆண்டின் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 2019-ம் ஆண்டின் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தால் மாற்றப்பட்டது.
இதன் மூலம் வாடிக்கையாளர்களைப் பாதுகாப்பதற்கான, பினாமி விளம்பரங்கள், ரோபோ அழைப்புகள், தவறான விளம்பரங்கள் ஆகியவற்றை தடுக்க முயற்சிகள் எடுக்கப்பட்டன. நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பு தேசிய மற்றும் மாநில அளவில் ஆன்லைன் மூலம் பிரச்சினைகளை தீர்க்கவும் ஏற்பாடாகி உள்ளாது. தற்போது, பெரும்பாலான மாநில மற்றும் தேசிய நுகர்வோர் தீர்வு ஆணையத்தின் 10 அமர்வுகள் ஆன்லைன் மூலமே செயல்படத் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் வாசிக்கலாமே...
கைவிரித்த லைக்கா... அஜித்தின் ‘விடாமுயற்சி’ அவ்வளவுதானா?
20 வருஷ கனவு... மொத்தமாக மாற போகுது கோவை... தயாராகுது புது திட்டம்!