பெங்களூருவில் ஒரே நாளில் கணவன், குழந்தைகளை விட்டு பிரிந்து வாழ்ந்த பெண்ணும், ரவுடியும் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலத்தின் தலைநகரான பெங்களூருவில் கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. மேலும் போதைப்பொருள் பயன்பாடு, சூதாட்டம் உள்ளிட்ட பல்வேறு சட்டவிரோத செயல்களும் அதிகரித்துள்ளது. ஏப்ரல் மாதத்தில் மட்டும் பெங்களூருவில் குற்றச்செயல்களில் ஈடுபட்ட 563 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 51 வெளிநாட்டவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், ஒரே நாளில் பெங்களூருவில் நேற்று இரண்டு கொலைகள் நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு ராமநகரா மாவட்டம் மகடி அருகே உள்ள ஹோசதொட்டியைச் சேர்ந்தவர் வித்யா(30). இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு கணவரை விட்டு பிரிந்த வித்யா, சாந்தகுமார் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இவர்கள் இருவரும் பெங்களூருவில் உள்ள காமாட்சிபாளையாவில் குடியேறினார். கார்மென்ட் நிறுவனத்தில் வித்யா பணிபுரிந்து வந்தார்.
இந்த நிலையில், சாந்தகுமாருக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக வித்யா சந்தேகப்பட்டார். இதனால் வித்யாவிற்கும், சாந்தகுமாருக்கும் இடையே கடந்த சில நாட்களாக தகராறு இருந்து வந்துள்ளது.
இந்நிலையில், சுங்கடக்கட்டே சொல்லாபுரம் லேஅவுட்டில் வித்யா வாடகை வீட்டில் வசித்து வந்தார். நேற்று நள்ளிரவில் வீட்டிற்கு வந்த சாந்தகுமார் வித்யாவை கத்தியால் குத்திக் கொலை செய்து தப்பியோடி விட்டதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து காமாட்சிபாளையா போலீஸார், வழக்குப்பதிவு செய்து சாந்தகுமாரை தேடி வருகின்றனர்.
பெங்களூரு பானசவாடி காவல் நிலையம் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். ரவுடியான இவர் ரியல் எஸ்டேட் தொழிலிலும் ஈடுபட்டு வந்தார். சர்ச்சைக்குரிய பகுதியில் வேலி அமைக்கும் பணியில் கார்த்திகேயன் ஈடுபட்டிருந்தார். இதற்கு மைக்கேல் மாஞ்சா உள்ளிட்ட அவரது கூட்டாளிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களைத் துப்பாக்கியைக் காட்டி கார்த்திகேயன் மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த மைக்கேல் மஞ்சு, அவரது நண்பர்கள் கார்த்திகேயனை நேற்று இரவு கத்தியால் குத்திக்கொலை செய்தனர். தகவல் அறிந்த பானசவாடி போலீஸார் விரைந்து சென்று கார்த்திகேயன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பெங்களூருவில் ஒரே நாளில் இரண்டு கொலைகள் நடந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
சென்னையில் அதிகாலையில் கொட்டித் தீர்த்த மழை... 4 நாட்களுக்கு வெப்பம் குறையும் என அறிவிப்பு!
பெங்களூருவில் பரபரப்பு... ரேவண்ணாவுக்கு திடீர் உடல் நலக்குறைவு!
உலக செஞ்சிலுவை தினம்: பேரிடர் முதல் போர் வரை... கலங்கிய மக்களுக்கு ஓடோடி உதவிய கடவுளின் தூதுவர்கள்
பெண் பத்திரிகையாளர் பரபரப்பு புகார்... சவுக்கு சங்கர் மீது சென்னையிலும் 2 வழக்குகள் பதிவு!
பரபரப்பு... உலகம் முழுவதும் தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அஸ்ட்ரா ஜெனிகா நிறுவனம் அறிவிப்பு!