மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடர்பாக போலி வீடியோ பரப்பப்பட்ட விவகாரத்தில் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டிக்கு டெல்லி போலீஸ் சம்மன் அனுப்பியுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சமீபத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் இட ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக பேசிய வீடியோவை திரித்து, அவருக்கு எதிராக போலி வீடியோ சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக பாஜக மற்றும் மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் டெல்லி போலீஸில் புகார் அளிக்கப்பட்டது.
அந்த புகாரில், 'சமூகங்களிடையே உள்ள நல்லிணக்கத்துக்கு தீங்கு விளைவிக்கும் நோக்கத்துடன் சில சித்தரிக்கப்பட்ட வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரப்பப்படுகின்றன. இது பொது அமைதி மற்றும் ஒழுங்கை பாதிக்கக்கூடும்' என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த புகார் தொடர்பாக டெல்லி போலீஸ் சிறப்பு பிரிவு சார்பில் இந்திய தண்டனைச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகள், தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் தொடர்புடைய விதிகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த வழக்கில் தெலங்கானா மாநில காங்கிரஸ் அரசின் முதல்வரான ரேவந்த் ரெட்டிக்கு டெல்லி போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
அதன் பேரில் அனைத்து செல்போன், மடிக்கணினி உள்ளிட்ட அவர் பயன்படுத்தும் மின்னணு தகவல் தொடர்பு சாதனங்களுடன் வரும் மே 1ம் தேதி விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என சம்மனில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
போலி வீடியோ விவகாரத்தில் தெலங்கானா முதல்வருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது அம்மாநில காங்கிரஸ் கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
கடந்த 6 மாதங்களில் 31 சதவீத மசாலாக்கள் நிராகரிப்பு; இந்தியாவின் மசாலாக்களை ஆராயும் அமெரிக்கா!
நடிகர் பிரகாஷ்ராஜ்க்கு 'அம்பேத்கர் சுடர் விருது'... விடுதலை சிறுத்தைகள் கட்சி அறிவிப்பு!
பகீர்... ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணியைக் காப்பாற்றிய பெண் போலீஸ்: பதற வைக்கும் வீடியோ வைரல்!