[X] Close

இதுவே பாகிஸ்தானாக இருந்தால் சசி தரூர் இப்படி பேசியிருக்க முடியுமா?- பாஜக அமைச்சர்


had-this-been-pakistan-tharoor-would-ve-been-silenced-giriraj-singh

  • பாரதி ஆனந்த்
  • Posted: 29 Oct, 2018 11:43 am
  • அ+ அ-

இதுவே பாகிஸ்தானாக இருந்தல சசி தரூர் இப்படி பேசியிருக்க முடியுமா என்று வினவியுள்ளார் பாஜக அமைச்சர் கிரிராஜ் சிங்.

முன்னதாக "பிரதமர் மோடியை கட்டுப்படுத்த முடியாமல் ஆர்எஸ்எஸ் திணறுகிறது. சிவலிங்கத்தின் மீதுள்ள தேள்போல பிரதமர் மோடி இருப்பதாக ஆர்எஸ்எஸ்க்கு நெருக்கமானவர்களே கூறுகிறார்கள். தரையில் தேள் இருந்தால் அதனை காலில் உள்ள செருப்பை வைத்துகூட அடித்து விடலாம்.

ஆனால் சிவலிங்கத்தின் மீது தேள் இருப்பதால் எதையும் கொண்டு அடிக்க முடியாது; கொத்தி விடுமே என்று அதனை கைகளால் எடுத்து வெளியே போடவும் முடியாது. இதுதான் ஆர்எஸ்எஸ்ஸின் தற்போதைய நிலை" என ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் ஒருவர் கூறியதாக மேற்கோள் காட்டியிருந்தார் சசி தரூர்.

இதற்கு பாஜகவினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில், அமைச்சர் கிரிராஜ் சிங், "சசிதரூர் மட்டும் பாகிஸ்தானில் இருந்திருந்தால். அவரது வாயை இந்நேரம் அடைத்திருப்பார்கள். அவர் நமது பிரதமரை மட்டுமல்ல கோடிக்கணக்கான இந்துக்களை, சிவபக்தர்களை அவமதித்துவிட்டார்.

தனது கட்சிக்காரர் ஒருவர் இப்படி பேசியிருப்பதைப் பார்த்துக் கொண்டு நான் சிவபக்தர் என ராகுல் எப்படிக் கூறுகிறார்?
தரூர் சார்பில் ராகுல் மன்னிப்பு கோர வேண்டும். காங்கிரஸ் எல்லை கடந்து சென்று கொண்டிருக்கிறது.
வெறுப்பை பாய்ச்சும் அரசியலை செய்து கொண்டிருக்கிறது" எனக் கூறியுள்ளார்.
 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close