[X] Close

கடைகளில் வேலை பார்ப்பவர்கள் இனி உட்கார உரிமை!- கேரள அரசு அவசர சட்டம்


kerala-govt-brings-ordinance-to-give-employees-right-to-sit-in-shops-establishments

  • பாரதி ஆனந்த்
  • Posted: 26 Oct, 2018 10:57 am
  • அ+ அ-

கடைகள், வணிக நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்கள் இனி உட்கார உரிமை அளித்து அவசர சட்டம் இயற்றியுள்ளது கேரள அரசு. இது நாட்டிலேயே முன்மாதிரியான சட்டம் என பாராட்டைப் பெற்றுள்ளது.

1960-ம் வருடத்திய ‘கேரள கடைகளும் வணிக நிறுவனங்களும்’ சட்டத்தில் தொழிலாளிகளுக்கு சாதகமான திருத்தங்கள் செய்வது தொடர்பான மசோதாவுக்கு ஆளுநர் அவசரசட்ட ஒப்புதல் அளித்துள்ளார். இதனையடுத்து இந்த சட்டம் அமலுக்கு வந்துள்ளது.

பெண்களால் சாத்தியமானது..

கடைகள், வணிக நிறுவனங்கள், உணவகங்களில் அதிகாலை முதல் மாலையில் பணிமுடியும்வரை பெண் தொழிலாளர்களுக்கு உட்கார உரிமை இல்லாத நிலையே நீடித்து வந்தது. 

பணி நேரத்தில் உட்காரவும், ஓய்வெடுக்கவும் வாய்ப்பு வழங்க வேண்டும் என பல்வேறு மையங்களில் பெண் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கேரள அரசு செவி சாய்த்ததால் துணிக்கடைகள், நகைக்கடைகள், உணவகங்கள் போன்ற வணிக நிறுவனங்களில் பணியாற்றும் பெண்கள் உள்ளிட்டோரின் இந்த சட்டத்திருத்தத்தின் மூலம் நிறைவேறியுள்ளது. 

நைட் ஷிப்டுக்கு ஓகே..

புதிய சட்ட மசோதா, பெண்களுக்கு நைட் ஷிஃப்ட் வேலை அளிக்கவும் வழிவகை செய்துள்ளது. ஆனால், 5 பேர் கொண்ட குழுவில் 2 பேராவது பெண்கள் இருக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. மேலும், இரவு பயண வசதியையும் நிறுவனமே செய்துதர வேண்டும் என பணித்துள்ளது.

அதேபோல் ஒவ்வொரு ஊழியருக்கும் வாரத்தில் ஒரு நாளாவது முழுமையாக விடுப்பு அளிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close