[X] Close

தீபாவளிக்கு 2 மணி நேரத்துக்கு மட்டுமே பட்டாசு வெடிக்கலாம்!- உச்ச நீதிமன்றம்


safer-firecrackers-allowed-from-8-to-10-pm-on-diwali-by-supreme-court

  • பாரதி ஆனந்த்
  • Posted: 23 Oct, 2018 11:37 am
  • அ+ அ-

தீபாவளியன்று 2 மணி நேரத்துக்கு மட்டுமே பட்டாசு வெடிக்கலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

சுற்றுச்சூழல் பாதிப்பு, உடல்நலக் குறைவு ஆகியவற்றை கணக்கில் கொண்டு பட்டாசு  உற்பத்தி மற்றும் விற்பனையைத் தடை செய்ய வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.

நீதிபதி ஏகே சிக்ரி மற்றும் அஷோக் பூஷன் ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த வழக்கை விசாரித்தது. இந்நிலையில் இந்த வழக்கில் இன்று (செவ்வாய்க்கிழமை) தீர்ப்பு வழங்கப்பட்டது.

நீதிபதிகள் கூறியதாவது:

தீபாவளியன்று இரவு 8 மணி முதல் 10 மணி வரை மட்டும் தான், பட்டாசு வெடிக்க வேண்டும். அதேபோல கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டின் போது இரவு 11:55 மணி முதல் 12:30 மணி வரை பட்டாசு வெடிக்கலாம். 
அதேபோல், குறைந்த அளவு சத்தம் வரும் பட்டாசுகள் மட்டுமே வெடிக்கப்பட அனுமதி வழங்கப்படுகிறது. அதுவும் உரிமம் வாங்கியுள்ள விற்பனையாளர்கள் மூலம் மட்டுமே விற்கப்பட வேண்டும். 
தீபாவளியின் போது பட்டாசு வெடிப்பது மக்களுக்கு மத்தியில் பிரபலமான ஒன்று என்பதை அறிகிறோம். அதே நேரத்தில் சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும் முடிவு எடுத்துள்ளோம். 
இணையம் வாயிலாக பட்டாசு விற்பனை செய்யப்படக் கூடாது. மீறி செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close