குட் நியூஸ்... 24 ம் தேதி முதல் சென்னை - விஜயவாடா இடையே வந்தே பாரத் ரயில்!


சென்னைக்கும் விஜயவாடாவுக்கும் இடையே புதிய வந்தே பாரத் ரயிலை எதிர்வரும் 24 ம் தேதியன்று பிரதமர் மோடி தொடக்கி வைக்கிறார்.

ஆந்திர மாநிலம் விஜயவாடா-சென்னை இடையே புதிய வந்தே பாரத் ரயில் வருகிற 24-ம் தேதி முதல் இயக்கப்பட உள்ளது. விஜயவாடாவில் நடைபெறும் தொடக்க விழாவில் ஆந்திர மாநில கவர்னர் அப்துல் நசீர், முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஆகியோர் கலந்து கொள்கின்றனர். அன்றைய தினம் பிற்பகல் 12.30 மணியளவில் பிரதமர் நரேந்திர மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் வந்தே பாரத் ரயிலை தொடங்கி வைக்கிறார்.

இந்த ரயில் விஜயவாடாவில் இருந்து குறைந்த நிறுத்தங்களுடன் சுமார் 6 மணி நேரம் 40 நிமிடங்களில் சென்னை வந்தடையும் என தெற்கு ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். எந்தெந்த ரெயில் நிலையங்களில் நின்று செல்லும் என்ற விவரங்களை அதிகாரிகள் வெளியிடவில்லை.

மறுமார்க்கமாக சென்னையில் இருந்து மீண்டும் விஜயவாடாவுக்கு வந்தே பாரத் ரெயில் இயக்கப்படுகிறது. சென்னை-விஜயவாடா இடையே குறைந்த நேரத்தில் ரெயில் இயக்கப்படுவதால் பயணிகளிடையே மிகுந்த வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

x