[X] Close

அமிர்தசரஸ் நிகழ்ச்சி ஏற்பாட்டாளரின் அதிர்ச்சிப் பேச்சு அம்பலம்


amirtasaras-train-accident

  • kamadenu
  • Posted: 21 Oct, 2018 07:40 am
  • அ+ அ-

நாட்டை பெரும் சோகத்தில் ஆழ்த்திய, 61 அப்பாவி உயிர்களை பலிவாங்கிய பஞ்சாப் அமிர்தசரஸ் ரயில் விபத்தில் நிகழ்ச்சியை ரயில்வே பாலம் ஒட்டி நடத்துவதற்கு எந்தவித முன் அனுமதியும் பெறவில்லை, போலீஸ் பாதுகாப்பு கோரவில்லை, முனிசிபல் கார்ப்பரேஷன் அனுமதியும் பெறவில்லை, ரயில்வே துறைக்கும் தெரிவிக்கவில்லை என்று முழுக்க முழுக்க அலட்சியமே காரணமாக அமைந்துள்ளது.

இந்த நிகழ்ச்சியில் தலைமை விருந்தாளியாகக் கலந்து கொண்ட நவ்ஜோத் கவுர் சித்துவிடம் தசரா நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த ஒருங்கிணைப்பாளர் கூறியதாக தற்போது அம்பலமாகியுள்ளது அதிர்ச்சிப் பேச்சு.

கூட்டம் நவ்ஜோத் கவுர் சித்துவைப் பார்ப்பதற்காகச் சேர்ந்துள்ளது, உற்சாகமாக உள்ளனர் என்றும் ரயில்வே ட்ராக்கில் அவர்கள் நின்று கொண்டிருக்கிறார்கள் நூறு ரயில்கள் வந்தாலும் அவர்கள் அங்கிருந்து நகரமாட்டார்கள் என்றும் கூறியது தற்போது அம்பலமாகியுள்ளது.

இன்று இது குறித்து வெளியான வீடியோவில் மாலைகளுடன் காட்சியளிக்கும் நவ்ஜோத் கவுர் சித்துவுக்கு அருகில் இருக்கும் நபர் மைக்கில், “மேடம், ரயில்வே பாலங்களில் நிற்பது பற்றி இந்த மக்கள் கவலைப்பட மாட்டார்கள். 5000 பேர் நின்று கொண்டிருக்கிறார்கள். தண்டவாளத்தில் நின்று கொண்டிருக்கிறார்கள். உங்களுக்காக நின்று கொண்டிருக்கிறார்கள், 500 ரயில்கள் கடந்து சென்றாலும் நகர மாட்டார்கள்” என்று கூறிய அதிர்ச்சி பேச்சு அம்பலமாகியுள்ளது,

இந்த வீடியோ எரியும் நெருப்பில் எண்ணெய்யை விட்டது போல், மக்கள் இருப்புப் பாதையில் நிற்பது தெரிந்திருந்துமே நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அலட்சியமாக இருந்துள்ளனர், வரும் ஆபத்தைப் பற்றி தெரியாமல் போலி உற்சாகம் காட்டி நிகழ்ச்சியை பாதுகாப்பில்லாமல் நடத்தியுள்ளனர் என்பது அம்பலமாகியுள்ளது.

இந்த ராவண வத நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர் மிது மதன் என்ற காங்கிரஸ் கவுன்சிலர் என்று தெரிகிறது.

நவ்ஜோத் கவுர் சித்து, நவ்ஜோத் சிங் சித்துவின் மனைவி, இவர் அனுமதி பெற்றார்களா என்பதையெல்லாம் பார்த்து விட்டு நான் நிகழ்சிகளில் கலந்து கொள்வதில்லை என்று கூறியுள்ளார்.

வாக்களிக்கலாம் வாங்க

'மிஸ்டர் லோக்கல்' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close