[X] Close

அமிர்தசரஸ் விபத்தை அரசியலாக்காதீர்!- சித்து மனைவி கோரிக்கை


people-politicising-amritsar-train-mishap-should-be-ashamed-navjot-kaur-sidhu

  • பாரதி ஆனந்த்
  • Posted: 20 Oct, 2018 11:57 am
  • அ+ அ-

அமிர்தசரஸ் ரயில் விபத்தை அரசியலாக்குபவர்கள் வெட்கப்பட வேண்டும் என பஞ்சாப் அமைச்சர் நவ்ஜோத் சிங் சித்துவின் மனைவி நவ்ஜோத் கவுர் தெரிவித்திருக்கிறார்.

பஞ்சாபில் தசரா விழாவின் போது நடக்கும் ராவண வதம் நிகழ்ச்சியை தண்டவாளத்தில் நின்று பார்த்துக் கொண்டிருந்த பொதுமக்கள் மீது ரயில் மோதியதில் 60 பேர் அதே இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 80-க் கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

இந்த சம்பவம் குறித்து அமிர்தசரஸ் எம்.பி. குர்ஜீத் சிங் அவுஜ்லா கூறும்போது, "சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும். குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள். அது நவ்ஜோத் கவுர் சித்துவாக இருந்தாலும்கூட நடவடிக்கை பாயும்" எனக் கூறியிருந்தார்.

இதை குறிப்பிட்டே சித்துவின் மனைவி நவ்ஜோத் கவுர், அமிர்தசரஸ் சம்பவத்தை அரசியலாக்குபவர்கள் வெட்கப்பட வேண்டும் என சாடியிருக்கிறார்.

நேற்றைய நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நவ்ஜோத் கவரும் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. ராவண வதம் முடிந்ததும் அவர் அங்கிருந்து கிளம்பியிருக்கிறார். அதன் பின்னரே விபத்து நடந்தது.

நவ்ஜோத் சிங் சித்து மனைவி நிகழ்ச்சிக்கு வந்ததால்தான் கூட்டம் கூடியது என்றும், மேலும் அவர் நிகழ்ச்சிக்கு தாமதமாக வந்ததாலேயேதான் மக்கள் ரயில் வரும் வேளையில் அங்கிருக்க வேண்டியதாயிற்று என எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close