[X] Close

ராவணனாக நடித்தவர் அமிர்தசரஸ் ரயில் விபத்தில் பரிதாப பலி


artist-playing-ravan-among-victims-of-amritsar-train-tragedy

  • பாரதி ஆனந்த்
  • Posted: 20 Oct, 2018 11:43 am
  • அ+ அ-

அமிர்தசரஸ் தசரா விழாவில் நடந்த ராம்லீலா நிகழ்ச்சியில் ராவணனாக நடித்தவர் ரயில் விபத்தில் பரிதாபமாக பலியானது தற்போது தெரியவந்துள்ளது.

பஞ்சாபில் தசரா விழாவின் போது நடக்கும் ராவண வதம் நிகழ்ச்சியை தண்டவாளத்தில் நின்று பார்த்துக் கொண்டிருந்த பொதுமக்கள் மீது ரயில் மோதியதில் 60 பேர் அதே இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 80-க் கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

இதில் ராவணனாக நடித்தவர் தல்பீர் சிங். ராவண வதம் முடிந்தவுடன் பரிசு கேடயத்தைப் பெறுவதற்காக அவர் காத்திருந்துள்ளார். அப்போதுதான் இந்த சம்பவம் நடந்திருக்கிறது.

தல்பீர் சிங்குக்கு 8 மாத கைக்குழந்தை இருக்கிறது. இந்த சம்பவம் குறித்து தீவிரமாக விசாரிக்க வேண்டும் என தல்பீர் சிங்கின் தாய் சவன் கவுர் வலியுறுத்தியுள்ளார்.

சம்பவம் குறித்து தல்பீர் சிங்கின் சகோதரர் பல்பீர் சிங் கூறும்போது, "ராமலீலா எல்லா வருடமும் நடக்கிறது. எனது சகோதரர் ராவணனாக நடித்தார். பின்னர் தசரா விழா நடந்த இடத்துக்குச் சென்றார். அவருடைய திறமைக்காக வழங்கப்படும் பரிசு கேடயத்தைப் பெறுவதற்காக அங்கு சென்றிருந்தார். திடீரென வேகமாக வந்த ரயில் மக்கள் மீது மோதியது. இதைப் பார்த்த எனது சகோதரர் சிலரை காப்பாற்ற முயன்றார். அப்போது ரயிலில் அவரும் சிக்கினார். அவரது மறைவு எங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது" என்றார்.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close