பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்போம்: அமித்ஷா மீண்டும் உறுதி


சிம்லா: இமாச்சலப் பிரதேசத்தின் உனா மாவட்டத்தில் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூருக்கு ஆதரவாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் நமது பகுதி. அதை நாம் மீட்போம். மக்களவைக்கு நடைபெற்ற முதல் 5 கட்ட தேர்தலில் 310இடங்களில் பிரதமர் நரேந்திர மோடிஏற்கெனவே வெற்றி பெற்றுவிட்டார். 6-வது மற்றும் கடைசி கட்ட தேர்தலில் 400 இடங்கள் என்ற இலக்கு எட்டப்படும். காங்கிரஸ் கட்சிக்கு வெறும் 40 இடங்கள்தான் கிடைக்கும். இமாச்சல பிரதேசத்தில் 6 சட்டப்பேரவை தொகுதிக ளுக்கு இடைத் தேர்தலும் நடைபெறுகிறது. இதில் பாஜகவை வெற்றி பெற வைத்தால், மாநிலத்தில் பாஜக ஆட்சி அமைக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.