[X] Close

சபரிமலை சன்னிதானத்தை நெருங்கும் பெண் பத்திரிகையாளர்!- யார் இந்த கவிதா?


woman-journalist-approaches-sannidhanam

  • பாரதி ஆனந்த்
  • Posted: 19 Oct, 2018 08:41 am
  • அ+ அ-

சபரிமலை ஐயப்பன் கோயிலை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறார் ஆந்திராவைச் சேர்ந்த பத்திரிகையாளர் கவிதா.
சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பின்னரும்கூட அங்கு பெண்கள் செல்ல முடியாத அளவுக்கு ஐயப்ப பக்தர்களும், பாஜக, ஆர்.எஸ்.எஸ்., காங்கிரஸ் என பல்வேறு கட்சியினரும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று நியூயார்க் டைம்ஸ் செய்தியாளர் சுஹாசினி சபரிமலை சன்னிதானத்தை நோக்கி முன்னேறினார். ஆனால். வெகு சில கிலோமீட்டர் தூரத்தில் அவர் தடுத்து நிறுத்தப்பட்டார்.

இந்நிலையில் இன்று காலை பெண் பத்திரிகையாளர் கவிதா போலீஸ் பாதுகாப்புடன் சபரிமலை சன்னிதானம் நோக்கி முன்னேறிக்கொண்டிருக்கிறார். ஐ.ஜி. ஸ்ரீஜித் தலைமையிலான காவல்துறை குழுவினர் அவருக்கு பாதுகாப்பு வழங்கி வருகின்றனர்.

யார் இந்த கவிதா?
கவிதா ஜக்கால் ஆந்திராவின் மோஜோ டிவியைச் சேர்ந்த செய்தியாளர் எனத் தெரிகிறது. இந்த தொலைக்காட்சி ஆந்திரா, தெலங்கானா என இரு மாநிலங்களிலும் இயங்குகிறது. இந்ந்நிலையில், கவிதா நேற்றிரவு கேமரா மேனுடன் சென்று போலீஸார் அணுகியுள்ளார். தான் சபரிமலை செல்ல விரும்புவதாகவும் தனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் கோரியுள்ளார்.

இதனையடுத்து இன்று காலை 200 பாதுகாப்பு வீரர்கள் புடைசூழ அவர் சன்னிதானம் நோக்கி முன்னேறினார். அவரும் ஆயுதப்படை வீரர் போல் ஜாக்கெட், ஹெல்மெட் எல்லாம் அணிந்து முன்னேறிக் கொண்டிருக்கிறார். இவர் சன்னிதானத்தை அடைந்துவிட்டால் 10 வயதுக்கு மேல் 50 வயதுக்குள் உள்ள முதல் பெண் சபரிமலை சன்னிதானத்தை அடைந்தவர் என்ற வரலாற்று சாதனையில் இடம்பெறுவார்.

நிலப்பந்தல் அருகே வாக்குவாதம்..

சபரிமலை சன்னிதானத்தை நெருங்கிவரும் கவிதா, தற்போது நிலப்பந்தல் அருகே உள்ளார். அங்கு ஐயப்ப பக்தர்கள் ஒன்றுகூடி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போலீஸார் அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close