[X] Close

அரசியல் செய்கிறார்கள்: சபரிமலை விவகாரம் தொடர்பாக கேரள அமைச்சர் சாடல்


kkshailaja-speech-about-sabarimala-issue

கே.கே.சைலஜா

  • kamadenu
  • Posted: 17 Oct, 2018 20:24 pm
  • அ+ அ-

அரசியல் செய்கிறார்கள் என்று சபரிமலை விவகாரம் தொடர்பாக கேரள அமைச்சர் கே.கே.சைலஜா கடுமையாக சாடியிருக்கிறார்

சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பு வழங்கியது. இதனை, எதிர்த்து தமிழகம் மற்றும் கேரளாவில் பல போராட்டங்கள் நடந்து வருகின்றன.

தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனுத் தாக்கல் செய்ய வேண்டும் என கேரளாவில் பாஜக பிரம்மாண்ட பேரணி நடத்தியது. மேலும், மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று (அக்.17) திறக்கப்பட்டது. இதனால் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்துக் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக பாஜக, ஐயப்ப சேவா சங்கம், பந்தளம் அரச குடும்பத்தினர், தந்திரி குடும்பத்தினர் சார்பில் போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் நடத்தப்பட்டன.

இப்பிரச்சினைத் தொடர்பாக கேரள மாநில அமைச்சர் கே.கே.சைலஜா, ஏ.என்.ஐ நிறுவனத்துக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:

பெண்களை அனுமதிக்கும் விவகாரத்தில் சிலர் வேண்டுமென்றே அரசியல் செய்கிறார்கள். அங்கு என்ன நடக்கிறது என்பதை என்னால் யூகிக்க முடியும். இது தூண்டிவிடப்படுகிறது. போராட்டக்காரர்கள் மோசமான அரசியலை நடத்துகிறார்கள். அவர்கள் வழக்கமான பக்தர்கள் என்று நம்மால் சொல்ல முடியாது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை அரசு அமல்படுத்த வேண்டும்

இவ்வாறு கே.கே.சைலஜா தெரிவித்திருக்கிறார்.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close