[X] Close

மீ டூ புகார்கள் குறித்து விசாரிக்க குழு: மத்திய அரசு முடிவு


the-ministry-will-be-setting-up-a-committee-to-examine-all-issues-emanating-from-the-metooindia-movement

  • பாரதி ஆனந்த்
  • Posted: 12 Oct, 2018 16:13 pm
  • அ+ அ-

மீ டூ இயக்கத்தின் வாயிலாக வைக்கப்படும் புகார்கள் குறித்து விசாரிக்க குழு அமைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

கடந்த வருடம் ஹாலிவுட்டில், ஹார்வி வின்ஸ்டீன் என்ற தயாரிப்பாளர், பல வருடங்களாக நடிகைகளுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்து வந்தது வெளிச்சத்துக்கு வந்தது. அப்போது, அலீஸா மிலானோ என்ற நடிகை, ட்விட்டரில் #Metoo (நானும் தான்) என்ற ஹேஷ்டேக்கை குறிப்பிட்டு, தான் துன்புறுத்தலுக்கு ஆளான அனுபவத்தைப் பகிர்ந்திருந்தார். இதோடு, பாதிக்கப்பட்ட மற்ற பெண்களும் இந்த ஹேஷ்டேக்கை பயன்படுத்தி, தங்கள் அனுபவங்களைப் பகிர முன்வர வேண்டும் என்று கோரினார். தொடர்ந்து, ஹாலிவுட்டில் மீடூ, ஒரு இயக்கமாக மாறி, இதன் மூலம் பலரது குற்றங்கள் வெளிச்சத்துக்கு வந்தன.

பாலியல் துன்புறுத்தலுக்கு எதிரான மீ டூ (#MeTooIndia) இயக்கம் இந்தியாவில் கொஞ்சம் கொஞ்சமாக வலுப்பெற்று வருகிறது. இதில் பல்வேறு திரையுலக பிரபலங்கள் மீதான குற்றச்சாட்டுகள் பெரும் அதிர்ச்சியடையும் வகையில் உள்ளது. இது தொடர்பாக பெரும் சர்ச்சையும் இந்திய திரையுலகில் உருவாகியுள்ளது.

இந்நிலையில், மீ டூ மூலம் வெளியாகும் புகார் குறித்து விசாரிக்க குழு அமைத்து நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளது மத்திய அரசு. இக்குழுவில் மூத்த நீதிபதி, சட்ட வல்லுநர்கள் இடம்பெறுவார்கள் என்று பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம்  தெரிவித்திருக்கிறது

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close