தொலைதூரக்கல்வி மற்றும் ஆன்லைன் வழிக்கல்வி படிப்புகளில் மாணவர்கள் சேர்ந்து படிக்கலாமா, அதில் உள்ள நிபந்தனைகள் என்ன என்பது குறித்து குறித்து பல்கலைக்கழக மானியக்குழு தெரிவித்துள்ளது.
எந்தெந்த உயர்கல்வித் துறைகளில் தொலைதூர மற்றும் ஆன்லைன் வழிக் கல்வி படிப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளன உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் குறித்து இன்று பல்கலைக்கழக மானியக்குழு விளக்கமளித்துள்ளது.
அதன்படி, ’திறந்த மற்றும் தொலைதூரக் கற்றல், ஆன்லைன் கல்விக்கான சேர்க்கையை உயர்கல்வி நிறுவனங்கள் வரும் 31- ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும். திறந்த மற்றும் தொலைதூரக் கற்றல் மற்றும் ஆன்லைன் முறையில் இளங்கலை, முதுகலை பட்டங்களை வழங்குவதற்கும், 2 ஆண்டு கால முதுநிலை டிப்ளமோ படிப்புக்கும் உயர்கல்வி நிறுவனங்களுக்கு குறைந்தபட்ச அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது.
தொலைதூர கற்றல் மற்றும் ஆன்லைன் வழிக் கல்வியை வழங்கும் உயர்கல்வி நிறுவனங்களின் அங்கீகார நிலையை மாணவர்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும். இதுமட்டுமல்லாமல், திறந்த மற்றும் தொலைதூரக் கற்றல், ஆன்லைன் வழிக் கல்வி வழங்க அங்கீகரிக்கப்பட்ட உயர்கல்வி நிறுவனங்களின் விவரங்களை https://deb.ugc.ac.in/ என்ற பல்கலைக்கழக மானியக்குழு இணையதளத்தில் அறியலாம்.
இன்ஜினீயரிங், மருத்துவம், பிசியோதெரபி, பார்மசி, நர்சிங், பல் மருத்துவம், கட்டிடக்கலை, சட்டம், விவசாயம், தோட்டக்கலை, ஓட்டல் மேலாண்மை, உணவு தொழில்நுட்பம், சமையல் அறிவியல், விமான பராமரிப்பு, காட்சிக்கலை மற்றும் விளையாட்டு, விமானம் ஆகிய உயர்கல்வி துறைகளில் திறந்த மற்றும் தொலைதூரக் கல்வி, ஆன்லைன் வழிக்கல்வியை வழங்க ஒழுங்குமுறை அமைப்புக்கோ, கவுன்சிலுக்கோ அனுமதி இல்லை. அதேபோல், அனைத்து துறைகளில் முனைவர், ஆராய்ச்சி படிப்பை திறந்த மற்றும் தொலைதூர கற்றல், ஆன்லைன் வழிகல்வி முறையில் பெறவும் தடை செய்யப்பட்டுள்ளன’ என அறிவித்துள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
இன்றும், நாளையும் மின்சார ரயில்கள் கும்மிடிப்பூண்டிக்கு செல்லாது!
லடாக்கில் ஹோலி கொண்டாட்டம்... ராணுவ வீரர்களுடன் ராஜ்நாத் சிங் பங்கேற்பு!
பாஜக வேட்பாளரானார் கங்கனா ரணாவத்... இமாச்சலப் பிரதேசத்தில் போட்டி!
யாருக்கென்று வாக்கு கேட்பார் ஸ்டாலின்? வேட்பாளர் அறிவிக்காத நிலையில் நெல்லையில் பிரச்சாரம்!
'சிவசக்தி'க்கு சர்வதேச விண்வெளி யூனியன் அங்கீகாரம்... நிலவின் அந்த பகுதிக்கு இனி இதுதான் பெயர்!