[X] Close

சபரிமலைக்கு வரும் பெண்களை இரண்டாக பிளக்க வேண்டும்! நடிகரின் வன்முறைப் பேச்சு


women-coming-to-sabarimala-temple-should-be-ripped-in-half

  • பாரதி ஆனந்த்
  • Posted: 12 Oct, 2018 15:20 pm
  • அ+ அ-

அண்மையில் உச்ச நீதிமன்றம், சபரிமலைக்கு அனைத்து வயதுப்பெண்களும் செல்லலாம் என தீர்ப்பு வழங்கியது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து சேவ் சபரிமலா என்ற பிரச்சாரமும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கேரளாவைச் சேர்ந்த பெண் பிரபலங்கள் சிலரும்கூட தீர்ப்பை எதிர்த்துள்ளனர். இந்நிலையில், நடிகர் கொல்லம் துளசியின் பேச்சு பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.

சபரிமலைக்கு வரும் பெண்களை இரண்டாகப் பிளந்து ஒரு பகுதியை டெல்லிக்கு அனுப்ப வேண்டும். இன்னொரு பகுதியை திருவனந்தபுரத்தில் உள்ள முதல்வர் அலுவலகத்தில் வீச வேண்டும் என அருவருக்கத்தக்க வகையில் அதிரவைக்கும் தொனியில் பேசியிருக்கிறார் நடிகர் கொல்லம் துளசி. 

கேரள மாநிலம் கொல்லத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது அவர் இப்படிப் பேசியிருக்கிறார். கொல்லம் துளசியின் பேச்சு அவரோடு நடித்த நடிகர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது. 

யார் இந்த கொல்லம் துளசி?

மலையாளத்தில் முன்னணி குணச்சித்திர நடிகராக வலம் வருபவர் கொல்லம் துளசி. தமிழில் விக்ரம் நடித்த ‘சாமுராய்’ மற்றும் ‘அருள்’ படங்களில் மட்டும் நடித்திருக்கிறார். ‘அருள்’ படத்தில் பசுபதியின் அண்ணனாக அரசியல்வாதியாக வருபவர் தான் கொல்லம் துளசி. தீவிரமான பாஜக ஆதரவாளராக வலம் வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close