[X] Close

OTP-யைப் பகிர்ந்தால் இதுதான் நேரும்!


bengaluru-man-falls-prey-to-cyber-fraud-loses-rs-35-000

  • பாரதி ஆனந்த்
  • Posted: 11 Oct, 2018 15:55 pm
  • அ+ அ-

வங்கி பண பரிவர்த்தனைகளுக்காக மொபைல் எண்ணுக்கு அனுப்பப்படும் ஓடிபி ரகசிய குறியீட்டு எண்ணை யாரிடமும் பகிரக் கூடாது என பலமுறை நமக்கு வங்கிகள் அறிவுறுத்தியிருக்கின்றன.

ஆனால், நம்மில் பலர் எச்சரிக்கை அறிவுறுத்தல்களை கண்டு கொள்வதே இல்லை. அதனால் ஏற்பட்ட விளைவு ரூ.35,000 இழப்பு. பெங்களூரைச் சேர்ந்த கிருஷ்ணா என்பவர் கடந்த வாரம் தனது வங்கிக் கணக்கில் இருந்து 1150 ரூபாயை மொபைல் ஆப் வழியாக தனது நண்பனின் வங்கி கணக்குக்குப் பதிலாக வேறு கணக்குக்கு அனுப்பியுள்ளார். 

இதைத் தொடர்ந்து வங்கியைத் தொடர்புகொண்டு இதுகுறித்த விவரங்களை அவர் தெரிவித்துள்ளார். அப்போது எதிர்முனையில் பேசியவர் கிருஷ்ணாவின் வங்கிக்கணக்கு விவரங்களை கேட்டுள்ளார். தொடர்ந்து அவரது மொபைலுக்கு வரும் OTP எண்ணை தனக்குப் பகிரும்படி கேட்டிருக்கிறார்.

 1150 ரூபாய் திரும்பக் கிடைக்கும் என்ற எண்ணத்தில் OTP விவரங்களை தெரிவித்து உள்ளார். சிறிது நேரத்தில் அவரது வங்கிக்கணக்கில் இருந்து ரூ 35000 எடுக்கப்பட்டதாக எஸ்எம்எஸ் வந்துள்ளது. 

இதனைத் தொடர்ந்து கிருஷ்ணா அருகிலிருந்த காவல் நிலையத்துக்கு புகார் கூறியுள்ளார். ஒரு விஷயத்தை வங்கிகள் செய்யக்கூடாது என்று சொன்னால் அது எந்த சூழலிலும் செய்யக்கூடாத செயல்தான். வங்கி ஊழியர்கள் கேட்டால் கூட டெபிட், கிரெடிட் கார்டுகளின் பின், ஓடிபி எண்களைப் பகிர வேண்டாம் எனக் கூறப்படுவதை பின்பற்றுவது நலம்.

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close