[X] Close

நடக்காத கூட்டங்கள் பற்றி இனி குறிப்புகள் தயார் செய்ய வேண்டுமே!- நிர்மலாவை சாடும் ராகுல்


the-greatrafalecoverup-has-begun

  • பாரதி ஆனந்த்
  • Posted: 11 Oct, 2018 14:58 pm
  • அ+ அ-

பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் பிரான்ஸ் பயணம் சென்றுள்ள நிலையில், அந்தப் பயணத்தை ட்விட்டரில் விமர்சித்திருக்கிறார் ராகுல் காந்தி.

பிரான்ஸ் நிறுவனத்திடம் இருந்து 36 ரபேல் போர் விமானங்களை வாங்க மத்தியஅரசு ஒப்பந்தம் செய்துள்ளது. முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு நிர்ணயித்த விலையைக் காட்டிலும் ஒவ்வொரு விமானத்துக்கும் அதிகமான விலையை மத்தியஅரசு வழங்குவதாக காங்கிரஸ் குற்றம் சாட்டி வருகிறது.

இந்த ரபேல் போர் விமான ஒப்பந்தத்தின் மூலம் ஏறக்குறைய ரூ.30 ஆயிரம் கோடிக்கும் அதிகமான ஊழல் நடந்திருப்பதாகவும் அக்கட்சி கூறி வருகிறது.

ரபேல் போர் விமான ஒப்பந்தத்தை அனில் அம்பானியின் நிறுவனத்துக்கு வழங்க இந்திய அரசு பரிந்துரைத்தது என்று பிரான்ஸ் நாட்டின் முன்னாள் அதிபர் ஹாலண்டே கூறிய பின் இந்த சர்ச்சை இரு நாட்டு அரசியலையும் உலுக்கி வருகிறது. இந்த சூழலில்தான் நிர்மலா சீதாராமன் பிரான்ஸ் பயணம் மேற்கொண்டிருக்கிறார்.

இது தொடர்பாக ராகுல் காந்தி, "ரஃபேல் ஊழலை மூடி மறைக்கும் வேலைகள் தொடங்கிவிட்டன. இந்த ஒப்பந்தம் சட்டபூர்வமானது என்பதை நிரூபிக்க பாதுகாப்பு அமைச்சர் நடக்காது ஆலோசனைக் கூட்டங்கள் குறித்து நிமிடக் குறிப்புகளை தயார் செய்ய வேண்டியிருக்கும். இரண்டு நாடுகளுமே ஒரு பொதுவான புனைவுக் கதையை ஒப்புக் கொள்ள வேண்டியிருக்கும்" எனப் பதிவிட்டிருக்கிறார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close