[X] Close

பாஜகவுக்கு பின்னடைவு: கோரக்பூரில் பத்திரிகையாளர்கள் வெளியேற்றம்


reporters-thrown-out-from-vote-booth

  • நெல்லை ஜெனா
  • Posted: 14 Mar, 2018 15:55 pm
  • அ+ அ-

உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூர் மக்களவை தொகுதி இடைத் தேர்தலில் ஆளும் பாஜகவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ள நிலையில் வாக்கு எண்ணிக்கை மையத்தில் இருந்து பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் வெளியேற்றப்பட்டனர்.

உத்தரப் பிரதேசம் மற்றும் பிஹார் மாநிலங்களில் நடந்த மக்களவை, சட்டப்பேரவை இடைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதில் கோரக்பூர் தொகுதியில் சமாஜ்வாதி முன்னிலை பெற்றுள்ளது. தற்போதைய நிலவரப்படி, 22 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் சமாஜ்வாதி வேட்பாளர் பிரவீண் குமார் முன்னிலை வகித்து வருகிறார்.

இந்த தொகுதியில் யோகி ஆதித்யநாத் நீண்டகாலம் எம்.பியாக இருந்துள்ளார். இதனால் ஆளும் கட்சியான பாஜகவிற்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளார்.

இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை மையத்தில் இருந்த பல்வேறு ஊடகங்களை சேர்ந்த பத்திரிகையாளர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். மையத்திற்கு வெளியே இருந்து வாக்கு எண்ணிக்கை நிலவரம் தொடர்பாக தகவல்களை வழங்கி வந்த ஊடகவியலாளர்கள் அனைவரையும் அங்கிருந்து வெளியேறுமாறு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

இதை தொடர்ந்து போலீஸார் அவர்களை அங்கிருந்து வெளியேற்றினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஊடகவியலாளர்கள் அனைவரும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதனால் வாக்கு எண்ணிக்கை மையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close