[X] Close

ஓடினார்கள்... ஓடினார்கள் தமிழகத்திலிருந்து கேரள எல்லைக்கே ஓடினார்கள்: எல்லாம் காதலுக்காக


transman-lover-flee-to-kerala-fearing-hostility-in-chennai

நஸ்ரின் பானு, நஸீர்

  • பாரதி ஆனந்த்
  • Posted: 13 Mar, 2018 11:22 am
  • அ+ அ-

காதலுக்கு கண் இல்லை என்பார்கள் காதலுக்கு பாலினமும் இல்லை என்பதை நிரூபிக்கவே இந்த இளம் ஜோடி தமிழகத்திலிருந்து தப்பி கேரளத்தில் தஞ்சம் புகுந்துள்ளது. நஸ்ரின் பானு, நஸீர் முகமது காதல் கதை இது.


நஸீர் முகமது ஒரு திருநம்பி அவருடன் நஸ்ரின் பானு காதல் கொள்ளவே குடும்பத்தினர் எதிர்ப்பை பதிவு செய்யத் தொடங்கியிருக்கின்றனர். இருவருக்குமே சென்னைதான் சொந்த ஊர் ஆனால் அன்றாடம் இருவீட்டாரிடமும் இருந்து கிளம்பிய நெருக்கடியால் இருவரும் ஓடினார்கள்... ஓடினார்கள் தமிழகத்திலிருந்து கேரள எல்லைக்கே ஓடினார்கள்.
திருவனந்தபுரத்தில் உள்ள ஒயாஸிஸ் கலாச்சார மையத்தில் தஞ்சம் புகுந்துள்ள அந்த ஜோடி தாங்கள் சந்தித்த இன்னல்களை எல்லாம் ஒவ்வொன்றாக விவரிக்கத் தொடங்கியது.


நஸ்ரின் பானு முதலில் ஆரம்பித்தார். நான் நஸீரின் தம்பிக்கு ஆசிரியை. நஸீர் அப்போது பெண்ணாகத்தான் அறியப்பட்டார். அவரிடம் சில ஆண் தண்மை இருந்தாலும் அது பெரிதாக பொருட்படுத்திக் கொள்ளப்படவில்லை. எனவே நானும் நஸீரும் நட்பில் இணைந்தோம்.


அப்போதுதான் எனது விரிவுரையாளர்களில் ஒருவர் நான் இனி நஸீருடன் பேசக்கூடாது பழகக்கூடாது என எச்சரித்தார். அத்துடன் நிற்காமல் விஷயத்தை எனது வீட்டிலும் தெரிவித்தார். அப்போதுதான் எல்லாப் பிரச்சினையும் தொடங்கியது.
குடும்பத்தினர் மத்தியிலும் சமூகத்திலும் எதிர்ப்பு வலுக்கவலுக்க எங்கள் நெருக்கம் மனதளவில் அதிகரித்தது. நஸீர் தன்னை முழுமையாக ஆணாகவே உணரத்தொடங்கினார். எங்களுக்குள் காதல் மலர்ந்தது.


ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்த நஸீரை அவரது சக பணியாளர்கல் கேலியும் கிண்டலும் செய்ய அவர் அங்கிருந்து விலகினார். பின்னர் ஓர் உணவகத்தில் பணியில் இணைந்தார்.
இப்படி நஸ்ரின் பானு சொல்லி முடிக்கும்போதே ஆரம்பித்தார் நஸீர், "என்னை நஸ்ரினின் குடும்பத்தார் ஒரு வேசி என்றனர். என்னைப் பற்றி நான் வசித்த பகுதியில் அவதூறுகளைப் பரப்பினர். எனக்கு எதிராக போலீஸில் வழக்கு தொடர்ந்தனர். 
நஸ்ரினுக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்தனர். ஆனால், என் மீதான காதலால் நஸ்ரின் வீட்டைவிட்டு வெளியேறினார். ஒரு விடுதியில் தங்கினார். பின்னர் தனது குடும்பத்தினர் தன்னை துன்புறுத்துவதாக போலீஸில் புகாரும் அளித்தார்" என்றார்.
கேரளாவில் இயங்கும் ஒயாஸிஸ் அமைப்பைப் பற்றி அறிந்தவுடன் இருவரும் அங்கு தஞ்சம் புகுந்துள்ளனர். நஸ்ரின் - நஸீர் பிரச்சினை தொடர்பாக மாநில மனித உரிமைகள் ஆணையத்தை அணுகியுள்ளது ஒயாஸிஸ்.


நஸ்ரினின் கேள்வி...
நான் ஒரு மூன்றாம் பாலினத்தவருடன் காதலில் வீழ்ந்ததே எனது குடும்பத்தாரின் பிரச்சினையாக இருக்கிறது. மூன்றாம் பாலினத்தவர்கள் மனிதர்கள் இல்லையா? அவர்களுக்கும் நம்மைப்போல் உணர்வுகள் இருக்காதா?" என்ற யதார்த்தமான கேள்வியை முன்வைத்திருக்கிறார் நஸ்ரின்.

எஸ்.ஆர்.ப்ரவீன்

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close