அதிர்ச்சி... நடுரோட்டில் இளம்பெண்ணின் ஆடையைக் கிழித்து நிர்வாணமாக்கி நிறுத்திய கொடூரன்!


ஹைதராபாத்தில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த இளம்பெண்ணிடம் ரகளை செய்த இளைஞர் ஒருவர், அந்தப் பெண்ணின் ஆடைகளை, திடீரென கிழித்து, நடுரோட்டில் நிர்வாணமாக்கியது அப்பகுதியில் இருந்தவர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் பாலாஜி நகரைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் நேற்று முன் தினம் இரவு வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது குடிபோதையில் இருந்த மாரய்யா என்பவர் அந்தப் பெண்ணை பின் தொடர்ந்து சென்று, தவறாக நடக்க முயன்றுள்ளார். அதனால் அந்த பெண் மாரய்யாவை தாக்க முயன்றார்.

ஆனால் போதையில் கண் மண் தெரியாமல் இருந்த மாரய்யா, அந்த பெண்ணை பதிலுக்கு திருப்பித் தாக்கத் தொடங்கினார். இதில் அந்த பெண்ணின் ஆடைகள் கிழிந்தன. இதனை தடுக்க முயன்ற மற்றொரு பெண்ணையும் மாரய்யா தாக்கினார். பாதிக்கப்பட்ட பெண் எவ்வளவோ கெஞ்சியும் போதையில் இருந்த மாரய்யா அந்த பெண்ணின் ஆடைகளை முழுவதுமாக கிழித்தெறிந்தார். ஆடைகள் இன்றி கூனிக்குறுகி நின்ற அந்த பெண்ணை சுமார் 15 நிமிடங்களுக்கு நடைபாதையில் நிர்வாணமாக நிற்க வைத்தார்.

அந்த வழியாக சென்றவர்கள் இதை வேடிக்கை பார்த்தபடி சென்றார்களே தவிர, யாரும் அந்தப் பெண்ணைக் காப்பாற்றவோ, மாரய்யாவை தட்டிக் கேட்கவோ முன் வரவில்லை. மாரய்யா அங்கிருந்து கிளம்பியதும் தான் சிலர், அருகில் இருந்த பேனரை கிழித்து அந்த பெண் மீது போர்த்தினர்.

இது குறித்த தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர், பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு மாரய்யாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

x