பெங்களூருவில் 13 வயது சிறுமி முன்பு தகாத முறையில் (சுயஇன்பம்) நடந்து கொண்ட 33 வயது வாலிபருக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கர்நாடகா மாநிலம், பெங்களூருவைச் சேர்ந்தவர் எச்.ரஹ்மத்துல்லா பெய்க். இவர் கடந்த 2020-ம் ஆண்டு தனது தந்தையுடன் சென்ற 13வயது சிறுமியை பின்தொடர்ந்துள்ளார். அத்துடன் அந்த சிறுமி முன்பு சுயஇன்பம் செய்துள்ளார். இதனால் அந்த சிறுமி வீட்டுக்குத் திரும்ப முயற்சித்த போது மீண்டும் அவரைப் பின் தொடர்ந்து எச்.ரஹ்மத்துல்லா பெய்க் அநாகரிமான முறையில் நடந்துகொண்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து சிறுமியின் தந்தை, காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து 2020 பிப்.13-ம் தேதி எச்.ரஹ்மத்துல்லா பெய்க் கைது செய்யப்பட்டார். இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு வழக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இந்த வழக்கில் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சிசிடிவி காட்சிகள் மூலம் எச்.ரஹ்மத்துல்லா குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டது. இதையடுத்து அவருக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 20,000 ரூபாய் அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.