[X] Close

நாங்கள் அதிகாரமளிக்க விரும்பினோம்; அவர்கள் அடக்குமுறை செய்தனர்: ராகுல் காந்தி


thank-you-supreme-court-for-supporting-the-congress-vision

  • பாரதி ஆனந்த்
  • Posted: 26 Sep, 2018 16:40 pm
  • அ+ அ-

ஆதார் வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்றுள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.

ஆதார் வழக்கில், அரசியல் சட்டப்படி ஆதார் செல்லும் ஆனால் வழக்கில் தனியார் நிறுவனங்களுக்கு ஆதார் தகவல்களை தருவதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது என்று உச்ச நீதிமன்றம் என தீர்ப்பு வழங்கியிருக்கிறது.

இது குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, "காங்கிரஸ் கட்சி ஆதார் அடையாளத்தை மக்களுக்கு அதிகாரமளிக்கும் கருவியாகப் பார்த்தது. ஆனால், பாஜகவுக்கு ஆதார் அடக்குமுறை செலுத்தும் ஆயுதம், கண்காணிப்பு கருவி. காங்கிரஸ் கட்சியின் தொலைநோக்குப் பார்வையை தூக்கிப்பிடிக்கும் வகையில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றத்துக்கு நன்றி" எனத் தெரிவித்திருக்கிறார்.
 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close