5 ஆண்டுகளில் 3,000 புதிய ரயில்கள் அறிமுகம்… மத்திய ரயில்வே அமைச்சர் தகவல்!


மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்

அடுத்த 5 ஆண்டுகளில் 3,000 புதிய ரயில்களை அறிமுகம் செய்ய உள்ளதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ``நாடு முழுவதும் ஆண்டுக்கு 800 கோடி பேர் ரயில்வே மூலம் பயணம் செய்து வருகின்றனர். இந்நிலையில், அதிகரித்து வரும் மக்கள் தொகையை கணக்கில் கொண்டு அடுத்த 5 ஆண்டுகளில் அதற்கு ஏற்றார் போல் ரயில்வே சேவையை அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. அதாவது, அடுத்த 5 ஆண்டுகளில் 1,000 கோடி பேர் பயணம் செய்யும் வகையில் ரயில் சேவையை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, 3,000 புதிய ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

ரயில்களின் பயண நேரத்தை குறைப்பதும் மற்றொரு இலக்கு. அனைத்து ரயில் தடங்களிலும் வந்தே பாரத் ரயில்களை அறிமுகம் செய்வதற்கு நேரம் எடுக்கும் என்பதால் தற்போதைய ரயில்களின் வேகத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். ரயில்வே துறையில் தற்போது 69,000 புதிய பெட்டிகள் உள்ளன. ஆண்டிற்கு 5,000 புதிய ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக ஆண்டுக்கு 200 முதல் 250 புதிய ரயில்கள் சேவைக்கு கொண்டுவரப்படும்'' என்று கூறினார்.

இதையும் வாசிக்கலாமே…

x